பிக் பாஸ் 8: இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? ஜோடியா வெளியே போக போவது இவங்க தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஏழாவது வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் வாக்குகளின் அடிப்படையில் சாச்சிகா, மஞ்சரி மற்றும் சிவக்குமார் மூன்று பேரும் குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். முதல் நாளே சாச்சிகா, அதிரடியாக எலிமினேஷன் செய்து வெளியே அனுப்பி இருந்தனர். இது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களில் அவர் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துவிட்டார்.

அதை தொடர்ந்து முதல் வாரத்தில் ரவீந்தரும் அடுத்ததாக அர்னாவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா என்று அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களும் என்ட்ரி கொடுத்த பின்னரும் இவர்களில் விளையாட்டு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தை போட்டியாளர்கள் கூட்டுவார்கள் என்று பார்த்தால் கன்டென்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் வீண் சண்டை விவாதங்கள் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ரசிகர்களை வெறுப்படையை செய்திருக்கிறது. அதிலும் தற்போதைய பொம்மை டாஸ்க்கில் ஒரே சண்டையாகத்தான் இருக்கிறது.

50 நாட்களை தாண்டி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் உள்ளே அதிகமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. ராணவை அடித்த ரயான்! ரெட் கார்டு யாருக்கு? சிறப்பான சம்பவம் இருக்கு
காரணம் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி போன போட்டியாளர்கள் கூட இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் உள்ளே வருவார்கள். அதற்கு முன்பு உள்ளுருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள், இதுதான் ஒவ்வொரு சீசனிலும் வழக்கமாக நடப்பது.

அந்த வகையில் பார்க்கும்போது இந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் சாச்சிகா கடைசி இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து மஞ்சரியும் அடுத்ததாக சிவகுமாரும் இருக்கிறார். இதனால் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப்படும் போது சாச்சிகா மற்றும் மஞ்சரி வெளியேற்றுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே கடந்த வாரத்திலும் சாச்சிகா வாக்குகள் குறைவாக பெற்று இருந்தார். ஆனாலும் அவர் கடைசி நேரத்தில் சேவ் ஆகிவிட்டார். அதுபோல இந்த வாரமும் ஏதேனும் மாற்றம் நடக்கப் போகிறதா? அல்லது சாச்சிகா வெளியேறப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications