Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன சிவாஜி சிவக்குமார்.. நடிகர் பிரபுவை விடுங்க, ராம்குமார் மீது வெறுப்பை உமிழ கூடாது: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவக்குமாரை மகனாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், அதுக்காக சிவக்குமாருக்கு வந்த வாய்ப்பையெல்லாம் ராம்குமார் தடுப்பதாக சொல்வது ஏற்க முடியாது. எனவே, ராம்குமார் மீது வெறுப்பை யாரும் உமிழக்கூடாது.. ஒட்டுமொத்தமாக ஒருவரை குற்றஞ்சாட்டுவதும் சரி கிடையாது" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

BBT Cinema யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான், சிவக்குமார் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். தனிப்பட்ட நபராகவே, தன்னுடைய திறமையால் அவர் மேலே வருவார். ஆனால், குடும்பத்தின் சப்போர்ட்டும் முக்கியம். ஜெயம் ரவி, தனுஷ் இவர்களுக்கெல்லாம் அப்பா, அண்ணன் சப்போர்ட் கிடைத்தது. இவர்கள் இல்லாவிட்டால் ஜெயரம் ரவி, தனுஷ் கிடையாது.

sivakumar ramkumar

இப்படி அண்ணன்களாலும், அப்பாவாலும், மனைவியாலும் பிரபலமானவர்களுக்கு மத்தியில், நடிகர் திலகத்தின் குடும்பத்திலிருந்து வந்த சிவக்குமார், வளர துடிக்கிறார், நடிக்க துடிக்கிறார்.

ராம்குமார்: சிவாஜி குடும்பத்தில், பிரபுவுக்கு பிறகு, விக்ரம் பிரபுவால் அந்த அளவுக்கு மேலே வரமுடியவில்லை. சில படங்கள் நடித்தும் வெளிவரவில்லை. அவரது படங்கள் பெரிய அளவுக்கு பேசப்படுகிறது, ஆனால், நடிப்பு அந்த அளவுக்கு பேசப்படவில்லை. ஜூனியர் சிவாஜி என்று ராம்குமாரின் மகன் துஷ்யந்த்தை சொன்னார்கள். அதனால்கூட சிவக்குமாரை சினிமாவில் வெளிவராமல் அமுக்கியிருக்கலாம்.

ஸ்ரீபிரியா இயல்பாகவே அனைவருக்கும் உதவக்கூடியவர். ரஜினி ஒருகாலகட்டத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டபோது, ஸ்ரீபிரியாதான் அவரை பராமரித்து, காப்பாற்றினார்.. ஸ்ரீபிரியா இல்லேன்னா ரஜினி இல்லை என்று ஒருமுறை பாலச்சந்தர்கூட சொல்லியிருந்தார். அதேபோல, கமலுடனும் இன்றுவரை நல்ல நட்பில் இருந்து வருகிறார் ஸ்ரீபிரியா.

ஸ்ரீபிரியா: அந்தவகையில், தன்னுடைய சகோதரி மகன் சிவக்குமாரை ஸ்ரீபிரியாதான் வளர்த்ததாக சொன்னார்கள். சிவக்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததும் ஸ்ரீபிரியா என்றார்கள். சினிமாவில் வெளிச்சத்தில் வரக்கூடியவரை, இருட்டில் தள்ளியது ராம்குமார் குடும்பமாகத்தான் இருக்கும் என்று பரவலாக சொல்கிறார்கள்.

அன்று சிவாஜிக்கும் பத்மினிக்குமிடையே இருந்த நட்பே கிசுகிசுக்கப்பட்டது.. ஆனால், குஷ்பு பிரபு இருவரும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியபோது, சட்டரீதியாக திருமணம் செய்யும்படி குஷ்பு அழுத்தம் தந்தார்.. காரணம் அவர் கேட்பது அங்கீகாரம்.. ஒருவேளை ராம்குமார் விஷயம் குஷ்புக்கு அப்போது தெரிந்திருக்கலாம்.. அதனால்கூட, பிரபுவுடன் ரகசிய வாழ்க்கை வாழ சம்மதிக்காமல், சட்ட அங்கீகாரம் கேட்டிருக்கலாம்.

குடும்ப கவுரவம்: கடைசியில், குடும்ப கவுரவம் கருதி ஒட்டுமொத்த பேரும் சேர்ந்து, நடக்கவிருந்த 2வது திருமணத்தை தடுத்துவிட்டார்கள். இதற்கு தன்னுடைய தந்தை மீது பிரபு வைத்திருந்த மரியாதையும், ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதனால் அந்த காதலை கைகழுவினார் பிரபு.

2வது மனைவிக்கான அங்கீகாரம் தராமல் இருக்க, இதெல்லாம்கூட ராம்குமாருக்கு முன்னுதாரணமாக அன்று இருந்திருக்கலாம். பிரபு - குஷ்பு இருவரின் சமாச்சாரமும் காதலுடன் போய்விட்டது. ஆனால், ராம்குமார் விவகாரத்தில் குழந்தை வரை வந்தாகிவிட்டது. ராம்குமாரால் சிவக்குமாரை ஏற்க முடியவில்லை என்பதற்காக மகன் மீது பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எங்காவது ஒரு மூலையில் கண்டிப்பாக அவருக்கு பாசம் இருக்கும்.

நரம்புகள்: நமக்கு ராம்குமாரை கொச்சைப்படுத்தணும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், எந்தவொரு விஷயத்தையும் பொத்தி பொத்தி வெச்சாலும் வெடிச்சு வெளியேவந்துவிடும். சமூகத்தின் நரம்பு பின்னி பிணையப்பட்டிருக்கிறது வாழ்க்கையில்.. இந்த சமூகத்தின் நரம்புகள்தான், ஒருவரின் வரம்புகளாக உள்ளது. அதனால் இவைகளையெல்லாம் ராம்குமாரால் எளிதில் தாண்ட முடியாது. இப்போதைக்கு சிவாஜி குடும்பத்துக்கு ராம்குமார்தான் மூத்தவராக இருக்கிறார்.. சிவாஜிக்கு பிறகு அந்த குடும்பத்துக்கு அப்பாவாக இருக்கிறார்..

சிவக்குமாருக்கான அங்கீகார போராட்டம் நடத்தப்பட்டிருக்கலாமே தவிர, சொத்துக்கான போராட்டம் நடந்ததில்லை.. சிவாஜி + ராம்குமார்= என்பதுதான் சிவக்குமார்... பிக்பாஸில் சிவக்குமார் பேசிய வசனங்களை பார்த்து நானும் ஆச்சரியப்பட்டேன்.. இதையெல்லாம ராம்குமார் தனிமையில், கண்ணீரில் நிச்சயம் பார்த்திருப்பார்.

வாய்ப்பில்லை: சிவக்குமாரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், அதுக்காக சிவக்குமாருக்கு வந்த வாய்ப்பையெல்லாம் ராம்குமார் தடுக்க வாய்ப்பில்லை.. மற்றவர்கள் வேண்டுமானால் அப்படி செய்திருக்கலாம், ஆனால், ராம்குமார் செய்ய மாட்டார். அவருக்கும் வயதாகிவிட்டது. கடந்துபோன சில விஷயங்கள் கடந்து போனதாகவே இருக்கட்டும் என்று நினைக்கலாம். எனவே, ராம்குமார் மீது வெறுப்பை யாரும் உமிழக்கூடாது.. ஒட்டுமொத்தமாக ஒருவரை குற்றஞ்சாட்டுவதும் சரி கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+