பிக் பாஸ் 8: தீபாவளிக்குள் 5 வைல்ட் கார்ட் என்ட்ரி! அதுவும் இந்த சன் டிவி நடிகையும் வராங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட இரண்டு வாரம் ஆகி இருக்கும் நிலையில் தீபாவளிக்குள் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி நடிகை திவ்யா ஸ்ரீதரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் வாரம் முழுக்க சண்டை சச்சரவுகளோடு போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த வாரத்தில் நிகழ்ச்சி வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதில் பல போட்டியாளர்கள் கேமராவை மறந்து தங்களுடைய இயல்பு கேரக்டரில் திரும்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இவர்களில் யார் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் போட்டியாளர்களின் ஆட்டம் இருந்து வருகிறது.

முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறினார். இவர் டப் போட்டியாளராக இருந்தாலும் பிசிக்கலாக இவரால் டாஸ்க் செய்ய முடியாது என்பதாலேயே இவர் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. ஆரம்பத்தில் இவர் போட்டியாளர்களின் மனதை குழப்பி எல்லோரையும் வழி நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய எதிர்பாராத வெளியேற்றம் விளையாட்டின் ஆட்டத்தையே மாற்றி இருக்கிறது.
அதிலும் ரவீந்தர் வெளியே போவதற்கு முன்பு நீங்கள் எல்லாரும் இப்படித்தான் என்று ஒவ்வொருத்தர் பற்றியும் அவர்கள் முகத்துக்கு நேராகவே ரிவ்யூ செய்து விட்டு வந்தார். அதற்குப் பிறகு போட்டியாளர்கள் தங்களுடைய விளையாட்டை மாற்றி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இரண்டாவது வாரம் ஆன இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் வாக்குகளின் அடிப்படையில் தர்ஷா குப்தா மற்றும் அர்னாவ் இருவரும் கடைசி இடத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
தர்ஷா குப்தாவிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் வாக்குகள் இவருக்கு குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த வாரத்தில் தர்ஷா காப்பாற்றப்பட்டு அர்னாவ் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நேற்று கூட அர்னாவ் மற்றும் அன்ஷிதா இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அர்னாவ் சன் டிவி சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்திருந்தார். எட்டு வருடங்களாக இவர்கள் லிவிங் வாழ்க்கையில் இருந்து வந்த நிலையில் காதலித்து திருமணம் செய்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். திவ்யா கர்ப்பமாக இருக்கும்போது அர்னாவ் தன்னை அடித்து சித்திரவதை செய்தார், அதற்கு காரணம் அன்ஷிதா என்று பல பேட்டிகளில் பேசி இருந்தார்.

திவ்யா அர்னாவ் இருவருக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ்க்கு வெளியே அர்னாவ் மற்றும் அன்ஷிதா நெருக்கமாக பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதுபோல பல பேட்டி, நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனி என்பது போலவே விளையாடி வந்தனர்.
ஆனால் நேற்று சொம்பு தூக்கி என்ற ஒரு அவார்ட் அன்ஷிதாவிற்கு அர்னாவ் கொடுத்தது பெரிய அளவில் பாதிப்பு அடைய வைத்து விட்டது. இந்த பிரச்சனைக்கு மத்தியில் வரும் வாரத்தில் ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரியாக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் திவ்யா ஸ்ரீதர் முக்கிய போட்டியாளராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை திவ்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் விளையாட்டு வேற விதமாக மாறிவிடும். ஏற்கனவே அர்னாவ், அன்ஷிதா மற்றும் திவ்யா ஸ்ரீதர் மூன்று பேரும் பேசிய பல ஆடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு இவர்கள் மூன்று பேரும் இருந்தால் டிஆர்பி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல நடிகை ஐஸ்வர்யாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே ஐஸ்வர்யா கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இப்போது வைல்ட் கார்ட் ஆக உள்ளே வரப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யா நடிகை லட்சுமியின் மகள்தான் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். மனதில் பட்டதை பேட்டிகளில் வெளிப்படையாக பேசி வரும் ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியில் வந்தால் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கும். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications