பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறும் விஜய் டிவி பிரபலம்.. அப்போ அந்த விஷயம் பொய்யா? செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் 8வது சீசனில் இரண்டாவது வாரத்தில் பத்து போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கான நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக யார் வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு பெரிய அளவில் மக்கள் மத்தியில் இருந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றி தான் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் மத்தியில் தேடல் இருக்கும். ஆனால் இந்த சீசனில் தான் தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். பிறகு விஜய் சேதுபதி என்று அறிவிக்கப்பட்டது அவரால் இந்த நிகழ்ச்சியை கமல் போல கொண்டு போக முடியுமா? என்று பேச்சு எழுந்தது அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக முதல் நாள் எபிசோட்டிலேயே விஜய் சேதுபதி சதம் அடித்து எல்லோரையும் மிரள வைத்து விட்டார்.

அதைத் தொடர்ந்து முதல் வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமை எபிசோடில் விஜய் சேதுபதியின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. போட்டியாளர்களுடைய முகத்துக்கு நேராக பேசும் பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. முதல் வாரம் ரவீந்தர் வெளியேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த வாரத்தில் மொத்தம் 10 போட்டியாளர்கள் பெயர் நாமினேஷனில் இருக்கிறது. இதில் கடைசி இடத்தில் தர்ஷா குப்தா மற்றும் அர்னாவ் இருக்கின்றார். இதில் அர்னாவ் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அர்னாவின் மனைவியான நடிகை திவ்யா ஸ்ரீதர்க்கும் இருக்கும் குடும்ப பிரச்சனை சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் தெரிஞ்சதுதான்.

அர்னாவ் காதலித்த திருமணம் செய்தாலும் அன்ஷிதாவோடு தொடர்பு ஏற்பட்டு தன்னை அடித்து கொடுமைப்படுத்தினார் என்று திவ்யா ஸ்ரீதர் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதனால் அர்னாவ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து ஜாமினில் தான் வந்திருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அர்னாவ் மற்றும் அன்ஷிதா இருவரும் இருப்பது ஆரம்பத்தில் இருந்தே இணையத்தில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவரும் ஹனிமூன் வந்திருக்கிறார்களா? என்று கூட பல கிண்டல் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நேற்று அன்ஷிதாவிற்கு அர்னாவ் சொம்பு தூக்கி என்ற அவார்டு கொடுத்ததும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். இந்த நிலையில் வரும் வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகம் இருக்கும் அதில் திவ்யா ஸ்ரீதர் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியானதும் நிகழ்ச்சி வேற விதமாக ஆட்டம் சூடு பிடிக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் இந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கும் அர்னாவ் வெளியேற்றப்படுகிறார் என்றால் திவ்யா ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது. திவ்யா ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் அர்னாவ் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும் என்றும் பலர் கூறி வருகிறார்கள். என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+