நன்றி மறக்காத முத்துக்குமரன்.. சொன்ன சொல்லை காப்பாற்றிட்டாரு.. இதுதான் பாசம்! குவியும் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக தீபக்கை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்களும் அதற்குப் பிறகு ஆறு வைல்டு கார்ட் போட்டியாளர்களும் இந்த விளையாட்டில் விளையாடி வந்தனர். கடைசியில் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முத்துக்குமரன் வெற்றி பெற்றார்.

அதுபோல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடைபெற்றது. அதாவது ரசிகர்களின் கருத்துப்படி பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக் மூன்று பேரும் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தீபக் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்டார்.
அப்போது முத்துக்குமரன் தான் அளவுக்கு அதிகமாக அழுது கொண்டிருந்தார். அப்போது உன்னை கொன்னுடுவேன்.. போடா நீ என்னை ஏமாத்திட்ட.. என்று தீபக் எவிக்ஷனை நம்ப முடியாமல் விரக்தியில் பேசிக்கொண்டிருந்தார். அதுபோல கிராண்ட் பினாலே மேடையில் இருக்கும் போது கூட தீபக் நான் என்னுடைய தம்பி முத்துக்குமரனை பார்க்க தான் ஆவலாய் இருக்கேன் என்று சொல்லி இருந்தார்.

இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் நல்ல ஒரு பாண்டிங் இருந்தது. ரசிகர்களை போல சக போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு படி முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு ஆனார். அதற்குப் பிறகு அவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக தீபக் வீட்டிற்கு முதல்முறையாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது நான் விஷால், அருணோடு போட்டி போட்டு முன்னேறி வந்தேன். ஆனால் என்னால் தீபக்கோடு மட்டும் போட்டி போட்டு ஜெயிக்க முடியவில்லை. என்னால் 45 வயசுக்கு மனுஷனுக்கு ஈடு கொடுத்து ஜெயிக்க முடியல. அந்த அளவிற்கு பிட்டான மனுஷனை நீங்க வெளியே அனுப்பிட்டிங்க. அதனால உங்க மேல கொஞ்சம் கோபமா தான் இருக்கேன் என்று ரசிகர்களிடம் சொல்லி இருக்கிறார்.
அதுபோல தீபக்கை தொடர்ந்து தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தந்த நடிகர் அருணையும் நேரில் சென்று பார்த்திருக்கிறார். சொந்த ஊரிலிருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த போது தனக்கு உதவியது நடிகர் அருண் மற்றும் அரவிந்த் என்ற இரட்டை சகோதரர்கள் தான் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் பேசியிருந்தார். அதுபோல தான் வெற்றி பெற்றதும் தனக்கு உதவியவர்களை நேரில் சென்று அவர்களிடம் நன்றி தெரிவித்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications