Bigg Boss: மக்களுக்கு ஏன் என்னை புடிக்கல? நான் செத்து பிழைத்து வந்திருக்கிறேன்! பிக் பாஸ் கனி உருக்கமான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் கனி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்த பிறகு இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கலங்கியபடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் மக்கள் மீது தனக்கு இருக்கும் வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அதிலும் கடந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் செய்யப்பட்டது பெரிய அளவில் பேசும் பொருளானது. அதிலும் முதல் நாள் அமித் வெளியேற்றப்பட்டார், இரண்டாவது நாள் கனி வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

கனி மற்றும் சான்ட்ரா இருவரும் டேஞ்சர் லிஸ்டில் இருந்தாலும் இவர்களில் சான்ட்ராவை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் மற்றும் உள்ளிருக்கும் போட்டியாளர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் கனியை பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றி இருந்தனர். இது குறித்து கனி இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இதுவரைக்கும் சப்போர்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி.
சந்தேகமும், வருத்தமும் எனக்குள் இருந்துகிட்டே இருக்கு. உங்க எல்லாருக்கும் தெரியும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பினாலும் ஒரு நாள் முழுக்க தனிமைப்படுத்தி தான் வைத்திருப்பார்கள். அந்த 24 மணி நேரமும் எனக்குள் ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. மக்கள் எதற்காக என்னை வெளியேற்றினாங்க? என்னை எதற்காக அவங்களுக்கு பிடிக்கல? என்று தான் நான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அந்த 24 மணி நேரமும் நான் செத்து பிழைத்து இருக்கிறேன். அதற்கு பிறகு தான் என்னுடைய ஹஸ்பண்ட், என்னுடைய தங்கை விஜயலட்சுமி எல்லோரும் வந்து எனக்கு புரிய வச்சாங்க. என்னை பழைய நிலைக்கு அவர்களால் தான் கொண்டுவர முடிந்தது. ஆனால் மக்கள் எதற்காக என்னை வெறுத்தாங்க என்ற கேள்விதான் இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது.
Bigg Boss : பிக் பாஸுக்குள் நடந்த நாடகம்! அமித்தை தொடர்ந்து இன்று வெளியேறும் போட்டியாளர்
நான் எல்லா இடத்திலும் அன்பை தானே காட்டினேன். ஆனால் எதற்காக என் மீது வெறுப்பு வந்தது? என்று எனக்கே தெரியல. ஆனாலும் எனக்கு வந்த கமெண்ட்ஸ் மெசேஜ் எல்லாவற்றையும் நான் படித்தேன். மக்கள் என் மீது காட்டிய பாசத்தை நான் பார்த்து சந்தோஷபடுகிறேன் என்று பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் மக்கள் மீது குறை சொல்லி பிறகு மக்களுக்கு நன்றி சொல்லி இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
கனி வெளியிட்ட இந்த வீடியோ விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி தன்னுடைய அக்காவிற்கு நடந்தது அன்ஃபேர் எவிக்ஷன், மக்கள் வாக்குகளால் அக்கா வெளியேற்றப்படவில்லை என்பது போன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவரை தொடர்ந்து இப்போது கனி வெளியிட்ட வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications