Bigg Boss: நேற்று விஜய் சேதுபதியிடம் அவ்வளவு பேசினாரே வியானா! இப்போ மன்னிப்பு கேட்டு போஸ்ட்! விஷயம் இதுதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து நேற்று வியானா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்த பிறகு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் வியானாவிற்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் தற்போதைய ஒன்பதாவது சீசன் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ட்ரோலில் சிக்கி வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் சினிமா பிரபலங்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல சில வாரங்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கிறார். இதுதான் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரத்தில் கூட கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் விஜய் சேதுபதி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உப்புக்கு சப்பான பிரச்சனைகளை பற்றி இந்த வாரம் அடையாளப்படுத்தி பேசியிருந்தார். இதனால் விஜய் சேதுபதி பேசுவதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கூட இது பற்றி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நேற்று அனுப்பப்பட்ட வியானா வெளியே வந்ததும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
இந்த பதிவில் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களையும் சரி என்னுடைய அம்மாவையும் வருத்தமடைய செய்துவிட்டேன். என்னுடைய விளையாட்டு உங்களுக்கு திருப்தியாக இல்லை என்று எனக்கு தெரிகிறது என்று பகிர்ந்து இருக்கிறார். அதோடு தனக்கு சப்போர்ட் செய்து சிலர் வெளியிட்ட பதிவுகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதற்கு பல ரசிகர்கள் நீங்க இந்த விளையாட்டில் நியாயமாக தான் விளையாடி கொண்டு இருந்தீங்க அதுவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது விஜய் சேதுபதி முன்பு கம்ருதீன் பற்றி எல்லா விஷயங்களையும் போட்டு உடைச்சிட்டீங்க. அதற்காகவே உங்களை பாராட்டணும் என்று சொல்லி வருகிறார்கள். அதாவது நேற்று சேதுபதி முன்பு நிற்க்கும் போது கம்ருதீன் பற்றி சில விஷயங்களை சொல்லி இருந்தார்.
அதாவது வீட்டில் யாரும் இல்லாத நேரம் என்னிடம் வந்து கம்ருதீன் பேசிக்கொண்டே இருக்கிறார். அதுவும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து, நீ வெளியே போனா கன்சிடர் பண்ணு... உங்க அம்மாகிட்ட வந்து பேசுறேன் என்று கூட சொல்லி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் நீ ஆரம்பத்திலேயே என்கிட்ட பேசி இருந்தா இந்த ரெண்டு தேவை இல்லாத பிரச்சனை இருந்திருக்காது என்று கூட சொல்லி இருக்கான் என்று சொல்ல, இதற்கு விஜய் சேதுபதி இந்த விஷயம் எல்லாம் பார்வதிக்கு தெரியுமா? என்று கேட்க தெரியும் என்று கப்ருதீன் சொல்லி இருந்தார்.
ஆனால் இதைக் கேட்டு பார்வதி இதெல்லாம் எப்படா நடந்து என்று கேட்பது போல கடுப்பாகி இருந்தார். பிறகு வியானா ஒவ்வொரு விஷயங்களை சொல்ல கம்ருதீன் வெக்கப்பட்டுக் கொண்டிருந்தார், பார்வதி கடுப்பாகி இருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் தான் இந்த கருமத்தை எல்லாம் பார்க்கணுமா என்று பொங்கிக் கொண்டிருந்தனர்.
இதுபோன்று எல்லா விஷயங்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் வியானா பேசியிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலருடைய கருத்து. ஆரம்பத்தில் இருந்து சில வாரங்களுக்கு வியானாவின் பேச்சை பார்த்து விஜய் சேதுபதி கூட பாராட்டி இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு எப்ஜே வீட்டு தலைவராக இருக்கும்போது அவருடன் சேர்ந்து வியானா விளையாடியதுதான் அவருக்கு நெகட்டிவ் ஏற்படுத்திக் கொடுத்தது. அதை வெளியே வந்து கண்டிப்பாக புரிந்து இருப்பார். இதனால் உள்ளே போக வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஆதிரையை போல ஒரு கை பார்த்து விடுங்கள் என்றும் சிலர் கமாண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications