Bigg Boss 9 Finale: அரோரா ஒரு குழந்தை, என் பொண்ணையும் அப்படி வளர்ப்பேன்! சபரி நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் யார் எவிக்ட் ஆகப் போகிறார்கள், யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்ற தகவல்கள் முன்கூட்டியே கசிந்தாலும், அந்த தருணத்தை நேரலையில் பார்த்தால் தான் சுவாரஸ்யம் வேற லெவலில் இருக்கும் என்பதைக் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மீண்டும் நிரூபித்துள்ளது. விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரை இந்த சீசன் முழுவதும் தொடர்ந்து பார்க்காத பலரும் கூட, "ஃபினாலேன்னா மிஸ் பண்ணக் கூடாது" என்ற எண்ணத்தில் டிவி முன் அமர்ந்திருக்கின்றனர்.

இன்னும் சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போய்விட்டு சென்னைக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் டிராபிக்கல் நின்று கொண்டு இருந்தாலும், அப்பப்போ இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று செல்போனிலும் செக் பண்ணி வருகிறார்கள்.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கு சபரிநாதன், அரோரா சின்க்ளேர், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளே இருந்தனர். நான்கு பேருமே தனித்தனி ரசிகர் பட்டாளத்துடன் இருந்ததால், ஒவ்வொரு எவிக்ஷனும் ரசிகர்களிடையே பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில், 3வது ரன்னர் அப்பாக அரோரா சின்க்ளேர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியது தான் ஃபினாலேவின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இந்த சீசனின் டைட்டிலை அவர் தட்டிச் செல்வார் என பலர் எதிர்பார்த்த நிலையில், நான்காவது இடத்திலேயே அவர் வெளியேறியது அவரது ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

எவிக்ட் ஆன பிறகு அரோரா பேசிய வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "முதல் வாரமே நான் இங்கே தாக்குப் பிடிப்பேனா என தெரியவில்லை. ஆரம்பத்தில் ரொம்ப சேஃப் கேம் தான் விளையாடினேன். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தான் என்மீதே எனக்கு நம்பிக்கை வந்து விளையாட ஆரம்பித்தேன்" என்று அவர் சொன்னார்.

இதைக் கேட்ட ரசிகர்கள், "துஷார் வெளியே போன பிறகு தான் பலூன் அக்கா உஷாரா ஆட ஆரம்பிச்சாங்க" என்று கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். 'பலூன் அக்கா' என்ற பெயரே இந்த சீசனில் பெரிய பேசுபொருளான ஒன்று. அரோரா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஆரம்ப நாட்களில், அந்த பெயரை வைத்து சிலர் ஆபாசமாகவும் ட்ரோல் செய்தனர். ஆனால் அந்த பெயரின் அர்த்தத்தை மாற்ற வேண்டும், அதை நேர்மறையாக மாற்ற வேண்டும் என்று அரோரா போராடியதற்கு ஒரு வகையில் பலன் கிடைத்திருக்கிறது என்றே ரசிகர்கள் சொல்கிறார்கள்.

அரோரா குறித்து பேசும்போது, சபரிநாதன் சொன்ன ஒரு விஷயம் ஃபினாலேவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால், அரோரா போல நல்ல குணம் கொண்ட பெண்ணாக வளர்ப்பேன்" என்று அவர் சொன்னது, அரோராவை மட்டுமல்ல, பல ரசிகர்களையும் நெகிழ வைத்தது. "முதல் நாள் அரோராவை குழந்தை மாதிரி பார்த்தேனோ, அதே மாதிரி தான் இப்பவும் பார்க்கிறேன்" என்று சபரி கூறியதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

மொத்தத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே, கசிந்த தகவல்களையும் தாண்டி, எவிக்ஷன், உணர்ச்சி, கலாய்ப்பு, நெகிழ்ச்சி என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு ஒரு முழு எண்டர்டெயின்மென்ட் பாக்கேஜாக அமைந்துள்ளது. "யார் ஜெயித்தார்" என்பதைக் காட்டிலும், "இந்த சீசன் எப்படி நினைவில் நிற்கப் போகிறது?" என்ற கேள்விக்குத்தான் இந்த ஃபினாலே பல பதில்களை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+