Bigg Boss: பிக் பாஸில் செம அல்டிமேட்! ரம்யா சொன்ன ஒரு வார்த்தை, கோபப்பட்டு உடனே வெளியேற்றிய விஜய் சேதுபதி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பல வாரங்களுக்கு பிறகு இப்போது தான் சூடு பிடித்திருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் விஜய் சேதுபதியோ அல்லது பிக் பாஸோ எது சொன்னாலும் கேட்கிறதே இல்லை. ஆனால் இன்று நடந்த ஒரு சம்பவம் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயமாக இருக்கிறது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோடில் வழக்கம் போல ப்ரோமோக்கள் மதியத்துக்கு மேலே வெளியானது. அதில் முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி கடுப்பாகவே பேசி இருந்தார். இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் நடந்த டாஸ்க் குளறுபடிகளை கேட்டுக்கொண்டார். அப்போது வியானா மற்றும் ரம்யா ஜோ இருவருடைய நாடகத்தையும் வெளி கொண்டு வந்தார்.

வியானா மற்றும் ரம்யா ஜோ எல்லாருமே பேசி வைத்து டாஸ்க் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் விக்கல்ஸ் விக்ரம் மீது தவறு என்பது போலவே அவர் மீது பழியை தூக்கி போட்டு இருந்தனர். இதனால் விஜய் சேதுபதி இந்த வாரம் விசாரித்து இருக்கிறார். தான் செய்த வேலைகள் எல்லாம் வெளியே தெரிந்து விட்டது என்று வழக்கம்போல வியானா அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
அதே அதைத் தொடர்ந்து இந்த வார தலைவராக இருக்கும் ரம்யாவிடம் டாஸ்க் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ரம்யா எனக்கு எதுவும் தெரியாது சார். எனக்கு தெரியாமலே எல்லாம் நடந்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி வினோத்தை அந்த இடத்தை விட்டு எதற்காக எழுந்து போக வைக்க வேண்டும் என்று, உங்க கூட சேர்ந்து எல்லாரும் பிளான் போட்டாங்க என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு ரம்யா எனக்கு தெரியாது சார் என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார்.
அதற்கு கேள்வி கேட்டால் இப்படித்தான் பேசுவேன்னு ரியாக்ஷன் பண்ணாதீங்க... உங்களுக்கு பிடிக்கலைன்னா கிளம்பி போகலாம், யாரும் இங்கே இருங்க என்ற சொல்லி கட்டாயப்படுத்தி விளையாட வைக்க மாட்டாங்க என்று விஜய் சேதுபதி சொல்ல, அதற்கு ரம்யா எனக்கு தெரியாது சார் எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை எல்லாரும் சொல்லிக்கிட்டே இருக்கீங்க என்று சொன்னதும் விஜய் சேதுபதி கெட்ட வார்த்தை எல்லாம் பேச தெரியுதுல்ல, அப்போ அதை சொன்னா என்ன என்று கேட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி கேள்வியால் கோபமான ரம்யா, சார் இங்க இருக்க மாட்டேன் சார் நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல, விஜய் சேதுபதி ப்ளீஸ் கம் நீங்க வரலாம் என்று சொல்லி இருக்கிறார். உடனே ரம்யா கோபமாக அங்கிருந்து கிளம்பி போகிறார். பிறகு வீட்டின் கதவு திறக்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட போகிறார் என்று தெரிகிறது.
எது எப்படியோ இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் தான் டாஸ்க் சரியாக விளையாடுவது கிடையாது. எந்த ஜாலியான டாஸ்க் கொடுத்தாலும் சரி, அங்கே சண்டை சச்சரவுகள் மட்டும்தான். அதோடு பிக் பாஸ் என்ன சொன்னாலும் அதற்கு சரியாக ரியாக்ஷன் செய்வது கிடையாது. விஜய் சேதுபதி சொல்வதையும் கேட்பது கிடையாது. இதுபோல போட்டியாளர்கள் நடந்து கொண்டிருக்கும்போது இவர்களுக்கு சரியான ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இப்போது ரம்யா வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications