Bigg Boss Tamil season 9: அக்டோபரில் தொடங்கும் பிக் பாஸ்! இந்த முறை இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து, தமிழில் ஒளிபரப்பாகி வரும், பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ், தனது 9-வது சீசனுடன், மீண்டும் வருகிறது. இந்தமுறை, நடிகர் விஜய் சேதுபதி தான், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பதில், எந்த மாற்றமும் இருக்காது, எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிக் பாஸ் வீட்டில், இந்த சீசனில், பல புதிய திருப்பங்கள், எதிர்பார்க்கப்படுகின்றன.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi vijay tv

பிக் பாஸ் சீசன் 9 - புதிய மாற்றங்கள்

கடந்த 8-வது சீசனை, விஜய் சேதுபதி, தொகுத்து வழங்கினார். அவரது எதார்த்தமான பேச்சு, பார்வையாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு, நிகழ்ச்சியைக் கலகலப்பாக்குவது போன்றவை, ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. இந்த சீசனிலும், அவரே தொகுப்பாளர் என்பதால், ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த ஏழு சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் கடந்த சீசனில் இருந்து தான் ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்திருந்தால் இது ஆரம்பத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது கமல்ஹாசனுக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகமானோர் விஜய் சேதுபதி பெயரே சொல்லி இருந்தனர்.

கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்க வந்தார். ரசிகர்கள் என்ன நினைக்கிறாரோ அதையே வார இறுதியில் போட்டியாளர்களின் முகத்துக்கு நேராக விஜய் சேதுபதி பேசியது பலருடைய பாராட்டைப் பெற்றது, சில சர்ச்சைகளையும் சந்தித்தது.

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 8-வது சீசனில், 24 பேர், போட்டியாளர்களாகக் களமிறங்கிய நிலையில், 9-வது சீசனில், சமூக வலைத்தள பிரபலங்களுக்கு, வாய்ப்பளிக்க உள்ளதாக, கூறப்படுகிறது. இந்தமுறை, ஜியோ ஹாட் ஸ்டாரில், பார்வையாளர்களும், தங்களது கருத்துகளை, 24 மணி நேர 'லைவ்'வில், கமெண்ட்டாகப் பதிவிடும் வசதியை, அறிமுகப்படுத்த இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது, பிக் பாஸ் நிகழ்ச்சியின், புதிய அம்சமாக இருக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்றவர்கள்

தமிழில், இதுவரை, ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் ஆகியோர், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக, வெளியேறியுள்ளனர். இந்த வரிசையில் ஒன்பதாவது சீசன் செப்டம்பரில், மலையாளத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில், தமிழில், பிக் பாஸ் தொடங்க இருப்பதாக ஜியோ ஸ்டாரின் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றியத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi vijay tv

பிக் பாஸ் 8-ன் நினைவுகள்

பிக் பாஸ் 8-வது சீசனின் வெற்றியாளராக, முத்துக்குமரன், தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ₹50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சௌந்தர்யா, 'ரன்னர்' ஆக, வெளியேறினார். இந்த சீசனில், முதல் நாளிலேயே, சாச்சனா வெளியேறியது, அர்ணவின் கோபம், தீபக்கின் முதிர்ச்சியான வழிநடத்தல், விஷால் தர்ஷிகா, அன்ஷிதாவின் காதல், என, பல சுவாரஸ்யங்களும், திருப்பங்களும், இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சீசன் 9, ஒரு புதிய அத்தியாயத்தை, தொடங்கும் என்று, ரசிகர்கள், ஆவலுடன், எதிர்பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+