Bigg Boss: பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! அதுவும் எதிர்பார்க்காத 4 பேர் லிஸ்டில்.. சான்ராவுக்கு ஆப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு எவிக்ஷன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் சான்ரா பெயரும் இருக்கிறது. அவரை இன்றே வெளியேற்ற போவதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாக பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விவரமான ரசிகர்கள் கூட ரசிகர்களே இந்த ஒன்பதாவது சீசனை பார்த்து கதறி வருகிறார்கள். என்னங்க எப்படி இருந்த நிகழ்ச்சி இப்படி ஆகிவிட்டதே என்று பலர் புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுவரைக்கும் நடந்த எட்டு சீசன்களை விட இந்த சீசன்தான் வொர்ஸ்ட் ரொம்ப மோசமா நடந்துக்குறாங்க, பிக் பாஸ் ரூல்ஸை யாரும் மதிக்கிறதே இல்ல. அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவங்கள இந்த சீசனில் எடுக்கல என்று பலர் பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறார்கள்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

இப்படியாக நிகழ்ச்சி பலருடைய அதிருப்தியை பெற்றிருக்கும் நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியில் இருக்கிறது. அதாவது இந்த வாரம் முழுக்கவே பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகப்படியான சச்சரவுகளும், சண்டைகளும் தான் இருந்தது.

போன வாரம் பிரச்சனைகள் கொஞ்சம் குறைவாக இருந்த நிலையில் இந்த வாரம் அதற்கு மிச்சமாக போட்டி போட்டு எல்லாரும் தங்களுடைய கிரைம் ரேட்டை கூட்டி வைத்திருக்கிறார்கள். போன வாரத்திற்கு முந்தைய வாரத்தில் தான் பிரஜன் மற்றும் சான்ரா, திவ்யா கணேஷ் போன்றோருக்கு செம டோஸ் கிடைத்தது. அதேபோல இந்த வாரமும் வினோத்துக்கு தான் விஜய் சேதுபதியிடம் அதிக டோஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் வினோத் செய்த செயல் அப்படி. இந்த வாரம் அவருக்கும் பிரஜனுக்கும் இடையே பெரிய சண்டையே வெடித்தது. இருவரும் அடித்துக் கொள்வதுபோல உரசிக்கொண்டு நின்றனர். இதுவரைக்கும் காமெடி செய்து கொண்டிருந்த கானா வினோத் இந்த வாரம் அதிரடி மோடுக்கு மாறி இருந்தார். அதனால் இந்த வாரம் பஞ்சாயத்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரத்தில் டேஞ்சர் சோனில் திவ்யா கணேஷ், எஃப்ஜே, கனி மற்றும் சான்ரா தான் இருக்கிறார்களாம். அதிலும் சான்ராவை இன்றே வெளியேற்ற போவதாகவும் தகவல் கூறப்படுகிறது. இப்போது வரைக்கும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சான்ராவை வெளியே அனுப்பிவிட்டு ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பிளான் போயிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாறலாம். ஆனாலும் சான்ரா வெளியே போனால் விளையாட்டு வேறு விதமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சான்ரா வெளியே போனால் தான் பிரஜன் அவருடைய விளையாட்டை விளையாடுவார். அதேபோல திவ்யா கணேஷும் சான்ரா இல்லை என்றால் தனியாக விளையாட்டை தொடங்குவார். அதனால் கூட இந்த வெளியேற்றம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எஃப்ஜே பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வரை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை வைத்தும் வீட்டிற்குள் பெரிதாக கண்டண்டு கிடைக்கவில்லை என்பதால் அவரையும் வெளியேற்ற முயற்சி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+