Bigg Boss: பிக்பாஸை விட்டு இந்த வாரம் வெளியே போறது விஜே பாரு இல்லை! 2 எவிக்ட் இவங்கதான்! எதிர்பாராத சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால் நீங்க எல்லாரும் எதிர்பார்க்காத இரண்டு வெளியேற்றம் தான் நடக்கப் போகிறதாம். ஏற்கனவே சில வாரங்களாக இரண்டு எவிக்ஷன் இருக்கிறது என்று கடைசி நேரத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் அதுவும் அன்ஃபேர் எபிக்ஷன் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதான். இந்த நிகழ்ச்சியில் தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்று அங்கு நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். இந்த வாரம் முழுக்க விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் போட்ட ஆட்டத்தை பார்த்து அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கே சம்பவமே வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது.

இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் விஜய் சேதுபதி கம்ருதீன் மற்றும் பார்வதியை திட்டி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் வெறும் திட்டு மட்டும்தான் கிடைத்திருக்கிறதே தவிர இந்த வாரம் வெளியே போவது ரம்யா மற்றும் சான்ரா என்று சொல்லப்படுகிறது. சான்ராவிற்க்கு ஏற்கனவே நெகட்டிவ் இருக்கிறது. ஆனால் பிரஜனை வெளியேற்றிய பிறகு சான்ராவை தக்க வைத்து கடைசி வரைக்கும் கூட்டிக்கொண்டு போவார்கள் என்று பேசப்பட்ட நிலையில் நாங்க நீங்க சொல்ற மாதிரி கிடையாதுங்க என்று நிரூபிப்பதற்காகவே இந்த வாரம் சான்ராவை வெளியேற்ற போறாங்களாம்.
ஏற்கனவே பிரஜன் வெளியே போன பிறகு உள்ளிருக்கும் எல்லாரையும் நான் பலி வாங்குவேன் என்று வட சென்னை சந்திராவாக சான்ராவாக சபதம் எடுத்திருக்கும் நிலையில் இந்த வாரம் சான்ராவை வெளியே அனுப்பி விஜய் சேதுபதி யாருக்கும் சப்போர்ட்டே பண்ண மாட்டார் என்று நிரூபிக்க போறாங்க என்றும் சில தகவல் கூறப்படுதுங்க.
நாம பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்ப்பது ஒன்று ஆனால் இந்த வாரம் நடப்பது வேற ஒன்றாக இருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா ஜோவை வெளியேற்ற போறாங்களாம். இதை இவங்க போன வாரமே நான் போறேன்னு சொன்ன போது வெளியேற்றி இருந்தால் டிஆர்பியும் அதிகரித்திருக்கும், விஜய் சேதுபதியை எதிர்த்து பேசினா இதுதான் நிலைமை என்கிற மாதிரி இந்த நிகழ்ச்சிக்கு ஒரு ஹைப் இருந்திருக்கும்.
ஆனால் போன வாரம் ரம்யாவுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு இந்த வாரம் வெளியே அனுப்பப் போறாங்களாம். ஏற்கனவே வெளியான அன் அபிஷியல் வாக்குகளில் எஃப்ஜே மற்றும் வியானா இருவரில் ஒருவர் வெளியே போவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் சூட்டிங் இன்னும் முடிவடையவில்லை என்பதால் கடைசி நேரத்தில் கூட இவர்கள் மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications