பிக் பாஸ் டைட்டில் வின்னரை கைது செய்த போலீஸ்.. காரணம் தெரியுமா? இன்னும் எவ்வளவு சீரழிவு வரப்போகிறதோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி இப்போது பலர் அதை உண்மை என்று நம்பி வெறியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை செய்துவரும் வனிதாவை ஒரு மர்ம நபர் முகத்தில் தாக்கி பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

அதுபோல பிக் பாஸ் தெலுங்கு டைட்டில் வின்னரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. அதுவும் சக போட்டியாளரை தன்னுடைய ரசிகர்கள் தாக்கியிருக்கிறார் என்ற காரணத்தை கூறி கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் துவங்கப்பட்டது. அந்த வகையில் தான் தற்போது கூட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் முதல் சீசன் தொடங்கப்படும் போது இருந்த எதிர்பார்ப்பு இப்போதைய சீசன்களில் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அந்த நிகழ்ச்சி பற்றி தான் இணையத்தில் அதிகமானோர் பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோக்களை பார்த்து கமெண்ட் தெரிவித்து வருவதை காண முடியும். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது போல தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் தமிழில் பிரபலமான கிரண், ஷகீலா உட்பட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் youtube மூலம் பிரபலம் அடைந்த பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் விவசாயம் குறித்து பல தகவல்களை தன்னுடைய youtube பக்கத்தில் தெரிவித்துக் கொண்டிருப்பார். தன்னுடைய youtube சேனல் மூலமாக இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் மூலமாகத்தான் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தன்னோடு பல நடிகர் நடிகைகள் நடிப்பு துறையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக பல்லவி பிரசாத் ஆரம்பத்தில் ரொம்பவே முயற்சி எடுத்து இருந்தார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரபல சீரியல் நடிகரும் விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவருமான அமர்தீப் வெற்றி பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் அமர்தீப் மற்றும் பல்லவி பிரசாத்துக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தது. மக்களின் ஆதரவோடு பல்லவி பிரசாத் வெற்றியாளர் என்று நாகர்ஜுனா அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பலதரப்பட்டோரும் பல்லவி பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சாமானிய மகன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 லட்சம் பணத்தை பெற்று இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதோடு இது ஒரு விவசாய மகனுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமர்தீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டிற்கு சென்றபோது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் சிலர் அமர்தீப் காரை தாக்கி உடைத்தது மட்டுமின்றி காரை துரத்திக் கொண்டு சென்ற சம்பவம் பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இது தொடர்பான புகாரில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படைகளில் பல்லவி பிரசாத் நேற்று டிசம்பர் 20 கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜூபிளி ஹில்ஸ் போலீசார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications