பிக் பாஸ் 7இல் நடந்த அதிசயம்.. சாமானியனுக்கு கிடைத்த 35 லட்சம்.. இதுதான் முதல் முறை.. வாழ்த்துக்கள் டீம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் பல நடிகர்கள் நடிகைகள் மட்டுமே கலந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாமானிய மனிதர் ஒருவரும் கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் இப்போது வெற்றி பெற்று அவருக்கு 35 லட்சம் பரிசு கிடைத்திருக்கும் நிலையில் அவர் குறித்த தகவல்கள் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழைப் போலவே தெலுங்கிலும் ஏழாவது சீசன் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. தமிழ் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு சீசன் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் இருந்து ஒரு சில பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் கிரண், ஷகிலா போன்றோர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று நினைத்திருந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர்.
ஆனால் அவர்களால் அங்கு அதிக நாட்கள் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு சில வாரங்களிலே வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு ஏழாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசனை இந்த முறையும் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்கியிருந்தார். கமல்ஹாசன் பல இடங்களில் தமிழ் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஒருதலை பட்சமாக இருக்கிறது.

ஆனால் நாகர்ஜுனா அங்கு இருக்கும் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்பது பற்றி அதிகமானோர் அடிக்கடி இணையத்தில் கமல்ஹாசன் மற்றும் நாகார்ஜுனாவை கம்பர் செய்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இப்போது தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வாகி இருக்கும் நபரை பற்றிய செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பிக் பாஸ் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் பல்லவி பிரசாத், அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து. இந்நிலையில் பல்லவி பிரசாத் வெற்றி பெற்றிருக்கிறார். இவர்தான் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்.
இவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்லவி பிரசாத் தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான். இவர் youtube மூலமாகத்தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் பலர் யூடியூப் மூலம் பிரபலமாக இருப்பது போலவே இவரும் தான் ஒரு விவசாயி என்று தன்னுடைய youtube சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கைகள்,, விவசாய வேலைகளை பற்றி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி இருக்கிறார்.
அந்த வீடியோவில் அதிகமாக பல்லவி பிரசாத் அனைவரையும் அண்ணா அண்ணா என்று அழைப்பதும், நான் ஒரு விவசாயின் குழந்தை என்று சொல்வதும் பலரையும் கவர்ந்திருக்கிறது. இவரை 555Kக்கு மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சோசியல் மீடியாவின் மூலமாக இவருக்கு கிடைத்த பிரபலத்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே இவர் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக கவர போராடி இருந்த நிலையில் கடைசியில் டைட்டில் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் ஒரு விவசாயின் குழந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications