பிக் பாஸ் ரித்விகாவுக்கு சோதனை மேல் சோதனை.. இப்படியா நடக்கணும்? உருக்கமாக சொன்ன ஒரு வார்த்தை! குவியும் ஆறுதல்
சென்னை: நடிகை ரித்விகா திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படும் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைபெற்ற நிலையில், திருமண தேதியை அறிவித்திருந்தார். ஆனால் அந்த தேதியையும் பிறகு மாற்றம் செய்வதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா பயணம்
ரித்விகா தமிழ் சினிமாவில் பரதேசி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்தது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. குறிப்பாக 'மெட்ராஸ்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார்.
பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரித்விகாவின் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்து, தனது அமைதியான விளையாட்டு மற்றும் இயல்பான அணுகுமுறையால் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இறுதியில் அந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறினார்.

ரகசியமாக இருந்த காதல்
ரித்விகா தனது நீண்ட நாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக முன்பு அறிவித்திருந்தார். இந்த உறவை அதிகமாக வெளிப்படுத்தாமல், மிகவும் எளிமையாக வைத்திருந்தார். எங்கேஜ்மென்ட் போட்டோக்களில் கூட வினோத் லக்ஷ்மணனின் முகத்தை பிளர் செய்து வைத்திருந்தார்.
அப்போதும் அந்த எங்கேஜ்மெண்டில் பிரபலங்கள் யாரும் கலந்து கொண்டது போல தெரியவில்லை. அதனால் எங்கேஜ்மென்ட்டை அவர் எளிமையாக முடித்து இருப்பாராக இருக்கும் நிச்சயம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்துவார் என்று பலரும் கூறி வந்தனர். அதுபோல அப்போதும் அவருடைய கல்யாணம் எப்போது என்று கூட அவர் சொல்லவில்லை. அதனால் அதைப் பற்றியும் விரைவில் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
அந்த நேரத்தில் தான் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். திருமண தேதி அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

திருமணம் ஒத்திவைப்பு
ஆகஸ்ட் மாதத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நிலையில், "குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள்" காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்திருந்தார். அதன்பிறகு நீண்டநாளாக எந்த அப்டேட்டும் இல்லாததால் சந்தேகங்கள் அதிகரித்தன. இதற்கிடையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேட்ட கேள்விக்கு, ரித்விகா "நினைத்தது நடக்கவில்லை" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
“காதலரை அறிமுகப்படுத்திய அபிராமி” ஒரு வரி கேப்ஷனில் முழு காதலை சொன்ன பிக் பாஸ் நடிகை.. பிரபலங்கள் அட்வைஸ்
இந்த பதிலே திருமணம் முற்றிலும் நின்றுவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவருக்கு பலரும் ஆறுதல் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் என்ன பிரச்சனை என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரித்விகா இன்னும் இது குறித்து எந்த தெளிவான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அவரே சொன்னால் மட்டும்தான் என்ன நடந்தது? எதனால் திருமணம் நின்று போனது என்பது தெளிவாக தெரிய வரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications