பூர்ணிமா கிளப்பிய பூகம்பம்.. குடிக்கார அங்கிள்னு சொன்னதுமே கிளம்பி வந்த கமல் ரசிகர்கள்.. நடந்தது என்ன
சென்னை: அந்த குடிக்கார அங்கிள் மாதிரி என பிக்பாஸ் கமல்ஹாசனை பூர்ணிமா கடுமையாக விமர்சித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டணி வெளியேற்றப்பட்டதை அடுத்து கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனியை விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக கமல்ஹாசன் முடிவு எடுத்ததாக விமர்சிக்கிறார்கள்.

மேலும் மாயா, பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா ஆகியோர் புல்லியிங் கேங் (தொல்லை கொடுப்பவர்கள்) என அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் ஐஷு கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த கேங் 3 ஆக குறைந்தது.
இந்த பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்த அர்ச்சனா, ஒரு முறை விசித்ராவிடம் இந்த புல்லியிங் கேங்கிடம் இருக்கவே பயமா இருக்கு மேடம் என தெரிவித்திருந்தார். அதற்கு விசித்ரா, பயப்படாதே, வலிமையாக இரு என அட்வைஸ் செய்திருந்தார். இந்த நிலையில் புல்லியிங் கேங்கின் அட்ராசிட்டியை கவனித்து வந்த கமல் கடந்த வாரம் பூர்ணிமாவை வச்சி செய்துவிட்டார்.
கடந்த எபிசோடு 50ஆவது நாளை எட்டியதால் கமல்ஹாசன் வீட்டில் இருந்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இந்த 50 நாட்களில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என கேட்டார். அதற்கு அர்ச்சனா சார் புல்லியிங் கேங்குடன் இருப்பதால் அவர்களை எதிர்கொள்ளும் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்துள்ளது என்றார்.
அது போல் மாயாவிடம் கேட்டதற்கு சார் இத்தனை நாளா நான் கன்டென்ட்டுக்காக மட்டுமே கேம் விளையாடி வந்தேன். ஆனால் இனி நான் யாரென காட்டுவதற்காகவே விளையாட போகிறேன் சார். ஏனென்றால் ரொம்ப கொஞ்ச பேருக்குத்தான் நான் யாருனு தெரியும், இனி மக்களுக்கு நான் யாரென்று காட்ட போகிறேன் என்றார்.
இதையடுத்து பூர்ணிமாவுக்கு தான் எங்கே எவிக்ட் ஆகிவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டது போல! மாயாவிடம் நான் ஐஷு மாதிரி கெட்ட பெயரைவாங்கிவிட்டேனா என கேட்டுள்ளார். பிறகு பாத்ரூமுக்கு சென்று அங்கு அழுத நிலையில் அவரை மாயாவும் ஜோவிகாவும் சமாதானப்படுத்தியுள்ளார்கள்.
அதுபோல் பிறகு வெற்றி நடை, வெட்டி நடையை யாருக்கு கொடுக்க போகிறீர்கள் என ஒவ்வொருத்தரையாக கேட்டார். அப்போது பூர்ணிமா எழுந்து ஏதோ சொல்ல வந்தார், சார் தொண்டை பிளாக் ஆகிடுச்சி, அவ்வளவு துக்கம், நான் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவா என கேட்டார். பின்னர் தண்ணீர் குடித்த பிறகும் பூர்ணிமா சார் எங்களை புல்லியிங் செய்யும் கும்பல் என அர்ச்சனா, விசித்ரா சொல்கிறார்கள். நீங்கள் அதை எல்லாம் கேட்க மாட்டீங்களா என கேட்டார்.
வெற்றி பாதையை விக்ரமுக்கும் வெட்டி பாதையை அர்ச்சனாவுக்கும் கொடுத்த பூர்ணிமா, மீண்டும் சார் அவங்களை எல்லாம் கேட்க மாட்டீங்களா என்றார். என்னம்மா கேட்க வேண்டும் என கேட்ட கமலிடம் விக்ரம் வேலையே செய்யவில்லை என அவரை புல்லி செய்றாங்க, ஆனால் அவர் அவ்ளோ வேலை செய்கிறார் .நீங்கள் கேட்க மாட்டீர்களா?
அப்போதும் பூர்ணிமாவுக்கு தொண்டை அடைப்பது போல் இருந்தது. உடனே கமல், சரிம்மா அந்த பிளாக் போவது போல் ஒரு விஷயம் சொல்லட்டுமா என கேட்டு நீங்கள் சேவ்டு என கூறினார். உடனே பூர்ணிமாவுக்கு சிரிப்பு வந்தது. இந்த நிலையில் மெதுவாக பூர்ணிமாவும் விக்ரமும் பேசும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் பூர்ணிமா, இதெல்லாம் நியாயமே இல்லை, அவங்க செய்தது தப்பு என்றாவது அவர் (கமல்) கேட்பாரானு பார்த்தால் கேட்கவே இல்லை.
நான் அவ்ளோ கஷ்டப்பட்டு பேசுறேன் என் பிளாக்கை கலாய்க்கிறீங்கள், ஆனால் நான் சொன்ன மேட்டரை தீர்த்து வைக்கவில்லை. அர்ச்சனாவின் மென்டல் ஹெல்த் பற்றி பேசியது பர்சனல் பிராப்ளம்னு சொல்லி விட்டுவிட முடியுமா. அதை மட்டும் அவர் கேட்டாரே! அது (அர்ச்சனாவை மென்ட்ல் ஹெல்த் குறித்து பேசியது ) புல்லியிங் என்றால் இதுவும் புல்லியிங் தானே. சரி ஓகே அவர் கேட்கவில்லை, ஆனாலும் நான் பேசிவிட்டேன். இதற்கு மேல் நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், திட்டுங்கள், அவமானப்படுத்துங்க, ஆனால் நான் பேசுவதை பேசுவேன். ஒருத்தர் தவறை மட்டும் கேக்கறாரு, இன்னொருத்தரை கேட்கவில்லை , இது அநியாயம், இதை கேட்பதால் நான் வெளியே போனாலும் ஹேப்பிதான் என்கிறார்.
மற்றொரு வீடியோவில் அந்த குடிக்கார அங்கிள் மாதிரி பண்றாங்க என பூர்ணிமா கூறிய வீடியோ கிளிப்பிங்ஸ் வைரலாகி வருகிறது. ஆனால் பூர்ணிமா யாரை சொல்கிறார் என தெரியவில்லை. அவர் கமல்ஹாசனை சொல்கிறார் என சில நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள் பூர்ணிமா, அர்ச்சனாவுக்காக கைதட்டும் ஆடியன்ஸை சொல்கிறார் என்றும் இல்லை அர்ச்சனா, விசித்ராவை சொல்கிறார் என்றும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications