கிழிந்த பாயில்! மார்ச்சுவரியில் நைட்டியில்.. கொலையுண்ட தாயை நினைத்து அர்ச்சனாவிடம் கதறிய விசித்ரா!
சென்னை: நடிகை விசித்ரா பிக்பாஸ் வீட்டில் தனது தாயை நினைத்து அர்ச்சனாவிடம் கண்ணீர் விட்டு அழுதார்.
1990 களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தவர் விசித்ரா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகன், முத்து, சுயம்வரம் உள்ளிட்ட படங்கள் பெயரை வாங்கிக் கொடுத்தன.

இவர் ஷாஜி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு புனேவில் செட்டில் ஆகிவிட்டார். இவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் கோகிலா எங்கே போகிறாள், வாழ்க்கை, ராசாத்தி, கார்த்திகை தீபம், ஆனந்தி உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 50 நாட்களை கடந்து இவர் பங்கேற்றுள்ளார்.
இவருக்கு தினமும் ரூ 28 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. அங்கிருப்போரில் அதிக ஊதியம் வாங்குபவர் விசித்ராதான். இந்த நிலையில் விசித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அநியாயத்தை தட்டி கேட்கிறார். அது போல் அவ்வப்போது தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதை கூறி வருகிறார்.
பூர்ணிமா பிரதீப் குறித்து கூறிய போது கூட அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை, நானும் இந்த வீட்டில் இருக்கிறேனே என தொடர்ந்து கேட்டார். அப்போது விஷ்ணு கூட பூர்ணிமாவுக்கு நடந்ததை விட உங்களிடம் இந்த விஷயத்தை ஏன் சொல்லவில்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் புல்லியிங் கேங்காக இருந்து வரும் நிலையில் விசித்ரா, அர்ச்சனாவுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
அர்ச்சனா புல்லியிங் கேங்குடன் சேருவதே இல்லை. மாறாக பிரதீப் ஆண்டனிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றுதான் கமலிடம் கூட சொன்னார். இதனால் அர்ச்சனாவுக்கு விசித்ராவுக்கும் ஒத்து போகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா தனக்கு ஒரு நடிகரால் பாலியல் தொல்லை ஏற்பட்டது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அர்ச்சனாவிடம் தனது தாயின் மரணம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறுகையில் "என் அம்மா பழைய பொருட்களை தூக்கி போட மாட்டார். மண் பானை, பழைய டப்பாக்கள் எல்லாவற்றையும் அப்படியே வைத்திருப்பார். நான் கூட திட்டுவேன், ஆனாலும் அவர் பழசை விடவே மாட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னாடி எடுத்த காட்டன் புடவைகளை கூட அப்படியே வைத்திருப்பார்.
ஆனால் அவர் இறந்த போது கிழிந்த பாயில் தூக்கிச் சென்ற போது என் மனம் நொந்துவிட்டது. அதிலும் பிணவறையில் நைட்டியில் என் அம்மாவை பார்த்தபோது... என கூறி விசித்ரா அழுதார். உடனே அர்ச்சனா அவரை ஆசுவாசப்படுத்தினார். நடிகை விசித்ராவுக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடையில் சொந்த பண்ணை வீடு இருக்கிறது.
இங்கு அவருடைய தந்தை வில்லியம் (70), தாய் வசந்தா (65) ஆகியோர் வசித்து வந்தனர். அப்போது கடந்த 2011 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். அதில் ஒருவர் 2013 இல் இறந்துவிட்டார், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications