த்ரிஷாவுடன் ரொமான்ஸ் செய்ய கமலுக்கும் சிம்புவுக்கும் போட்டி! படமா எடுக்குறாங்க! வறுத்த ப்ளூசட்டை
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள "தக் லைஃப்" திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விவரித்துள்ளார். இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தையே இவர் கொடுத்துள்ளார். இதற்கு பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் வருகிறார்கள்.
"தக் லைஃப்" திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் நாயகன் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கமல் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். சிம்பு ரசிகர்களும் சிம்புக்காக பார்க்கலாம் என்கிறார்கள். பிரபல திரை விமர்சகரான ப்ளூசட்டை மாறனும் தன் பங்குக்கு படத்தை எக்கசக்கமாக விமர்சித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதை
38 ஆண்டுகள் கழித்து பெரிய லெஜன்ட்களின் (மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான்) கூட்டமைப்பில் உருவான இந்த திரைப்படம் கேங்ஸ்டர் கதை என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் புரமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்தது.
சிம்புவின் தந்தை
ஆனால் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என படம் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். படம் குறித்து ப்ளூசட்டை மாறன் கூறுகையில், "சிம்புவின் தந்தை சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால் ஆதரவற்று நிற்கும் அவரை கமல் எடுத்து தன் பிள்ளை போல் வளர்க்கிறார்.
ரொமான்ஸ்
சிம்புவின் தங்கையை கண்டுபிடித்து தருவதாக சிம்புவுக்கு கமல் சத்தியம் செய்கிறார். சிம்புவின் தங்கை சந்திராவை தேடிய போது இந்திரா (த்ரிஷா) கிடைக்கிறார். இந்திராவுடன் கமலுக்கு காதல் ஏற்பட்டு ரொமான்ஸ் செய்கிறார். ஆனால் அவரை அடைய சிம்பு முயற்சிக்கிறார்.
இந்திராவை அடைய போட்டி
இந்திராவை அடைய கமலுக்கும் சிம்புவுக்கும் நடக்கும் போட்டிதான் இந்த படத்தின் கதை எனலாம். இது கேங்ஸ்டர் படம் இல்லை. அப்படி ஒரு சீனும் இந்த படத்தில் இல்லை. கேங்ஸ்டர் என்பதை நம்ப வைப்பதற்கான ஒரு சீன் கூட இந்த படத்தில் இல்லை. சிம்புவும் கமலும் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
லாஜிக்கும் இல்லை
படத்தில் கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை. கமல் ஜெயிலுக்கு போனாலும் அங்கேயும் த்ரிஷா வந்துவிடுகிறார். இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள். சிறையில் இருந்து வந்தாவது ஏதாவது சண்டை காட்சிகளில் நடிப்பார் என பார்த்தால் 4 நாட்கள் த்ரிஷா வீட்டில் தங்குகிறார்.
அபிராமி
பின்னர் தனது மனைவி அபிராமியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கும் அவர் ரொமான்ஸ்தான் செய்கிறார். இதில் கேங்ஸ்டர் கதை எங்கு வந்தது என தெரியவில்லை. முத்த மழை பாடல் படத்தில் இல்லை. விண்வெளி நாயகா மட்டும் ஒலிக்கிறது.
விண்வெளி நாயகா
விண்வெளிக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை. அவர் என்ன கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பா பையனா. இல்லை சுனிதா வில்லியம்ஸின் பெரியப்பா, என்னதான் படம் எடுக்குறானுங்க, கேங்ஸ்டர்களுக்குள் சண்டை ஏன் என தெரியவில்லை. இந்த கேங்கிலேயே ஷார்ப்பான ஆள் சிம்புதான் என்கிறார்கள். அப்படி சிம்பு என்ன வேலை பார்த்தார் என தெரியவில்லை.
சிம்புவுக்கு கம்பேக்
சிம்புவுக்கு கம்பேக், கமலுக்கு கம் பேக் என சொல்கிறார்கள். இதை நீங்கள் நம்பி சென்றால் உங்களுக்கு ஜிங்குச்சாதான். கன்னட மொழி விவகாரத்தில் We Stand with Kamal என கூறினார்கள். படத்தில் சிம்பு கேட்பது ஒரு ஹீரோயினாவது கொடுங்கள் என்பதுதான். எனவே "We Stand with Simbu" என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications