Captain Prabhakaran Box Office: 3வது நாள் கேப்டன் பிரபாகரனின் வசூல் சாதனை! - அழியாத விஜயகாந்தின் புகழ்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம், அவரது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்'. 1991-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. தற்போது, இந்த கிளாசிக் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி, அதன் புகழ் காலத்தால் அழியாதது என்பதை நிரூபித்துள்ளது.

பிரம்மாண்டத்தின் பின்னணி
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம், தனது சாகசங்கள் மற்றும் ஆழமான வசனங்களால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. இந்த படத்தில் தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டன. லியாகத் அலிகான் எழுதிய வசனங்களை, விஜயகாந்த் தனது கம்பீரமான குரலில் பேசி, ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளினார்.
ரீ-ரிலீஸில் புதிய சாதனை
ஆகஸ்ட் 22-ம் தேதி, தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகளில் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளில் ₹42 லட்சத்தையும், இரண்டாவது நாளில் ₹86 லட்சத்தையும் வசூலித்த இந்தப் படம், மூன்றாவது நாளான நேற்று ₹1.30 கோடிகளை வசூல் செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அனைவரையும் கவர்ந்த படம்
இந்தப் படம் விஜயகாந்தின் ரசிகர்களால் மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களாலும் ரசிக்கப்படுகிறது. இது, விஜயகாந்த் சினிமா உலகில் இன்றும் கொண்டிருக்கும் மதிப்பையும், அவரது படங்கள் பெற்றிருக்கும் வரவேற்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் இந்த ரீ-ரிலீஸ் வெற்றி, விஜயகாந்தின் புகழ், அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையைப் போலவே, சினிமா உலகிலும் காலத்தால் அழியாதது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் மற்றும் வில்லனாக மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆர்.கே. செல்வமணியின் கடின உழைப்பு
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தற்போது 'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 400 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுவே படக்குழுவினருக்கு பெரிய வெற்றி என்று செல்வமணி கூறினார். "இந்தப் படம் வெளியான போது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் சென்டிமென்டாக ஓடாது என்று சிலர் சொன்னார்கள். அது போலவே நான் விஜயகாந்துடன் இணைந்த இரண்டாவது படம் என்பதாலும் ஓடாது என்று சிலர் கூறினர். ஆனால் அனைத்தையும் முறியடித்து இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது" என்று செல்வமணி கூறினார்.
இந்த படம் எடுத்த காலகட்டத்தில் எந்த ஒரு வசதியும் கிடையாது CG, ட்ரோன் கேமரா என்று எந்த வசதியும் கிடையாது. ஒரு காட்சியில் 2000 பேர் நடிக்க வேண்டும் என்றால் அந்த காட்சி எடுப்பதற்காக 2000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். அப்படி இந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் அதிகமாக சிரமப்பட்டு இருந்தோம்.
விஜயகாந்த் சார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் எங்களுடன் பணியாற்றிய டெக்னீசியன்கள் என எல்லோருமே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து படம் எடுத்து முடித்தோம். இந்த படம் எடுக்கும்போது இரண்டு, மூன்று பேர் உயிரை கூட இழந்து இருக்கிறார்கள். ஏன் விஜயகாந்த் சார் கூட இரண்டு மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார்.
எனக்கும் அதுபோல நடந்தது ஆனாலும் எங்கள் அனைவரின் குறிக்கோளும் இந்த படம் பிரமாண்டமாக படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 100 நாட்கள் காட்டுக்குள் தான் பயணம் செய்தோம். அங்கு ரூம் கிடையாது, கேரவன் கிடையாது, பாத்ரூம் இருக்காது இதையெல்லாம் உங்களுக்கு ஓகே என்றால் படம் பண்ணுவோம் என்று விஜயகாந்த் சாரிடம் முதலில் நான் சொன்னேன். அதற்கு அவர் எனக்கு ஓகே என்று சொல்லிவிட்டார். அவரே ஓகே சொன்ன பிறகு மற்றவர்களும் ஓகே சொல்லி விட்டார்கள். அதனால் தான் அந்த படத்தை எங்களால் வெற்றி படமாக எடுக்க முடிந்தது என்று ஆர் கே செல்வமணி பேசி இருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications