Captain Prabhakaran : கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸின் பிரமாண்ட வெற்றி - 8 நாள் வசூலில் கலக்கும் விஜயகாந்த்
சென்னை: ரஜினி, கமல் என இரு பெரும் ஆளுமைகள் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சாதாரண புதுமுக நடிகராக நுழைந்து, 'கேப்டன்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். அவரது நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்', 34 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தியிருக்கும் அற்புதம், இன்றும் அவரே வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துள்ளது.

விஜயகாந்த் - சினிமாப் பயணம்
சினிமா துறையில் விஜயகாந்தின் தொடக்கம் எளிதானதாக இல்லை. பல தோல்விப் படங்களுக்குப் பிறகு, 'சட்டம் ஒரு இருட்டறை' அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியான தோல்விகள், வெற்றிகள் எனப் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டார். ஆக்ஷன் ஹீரோவாக அவர் நடித்த திரைப்படங்கள், அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்தன. கிராமப்புறக் கதைக்களங்களில் அமைந்த 'வைதேகி காத்திருந்தாள்' மற்றும் 'அம்மன் கோவில் கிழக்காலே' போன்ற படங்களின் வெற்றி, அவரை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. ஒரு கட்டத்தில், ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்குக் கடும் போட்டி கொடுக்கும் நடிகராக அவர் உயர்ந்தார்.
ரஜினியுடன் போட்டி
விஜயகாந்தின் 'சின்ன கவுண்டர்' படத்தின் வெற்றியைப் பார்த்து, அதேபோல ஒரு கிராமப்புறக் கதைக்களத்தைக் கேட்டு, ரஜினி நடித்த படம்தான் 'எஜமான்'. ஆனால், கிராமப்புற ரசிகர்களின் மனதில் 'சின்ன கவுண்டர்' ஏற்படுத்திய தாக்கத்தை 'எஜமான்' ஏற்படுத்தவில்லை என பலர் கூரி இருக்கிறார்கள். எஜமான் படம் ஹிட் ஆனாலும் சின்ன கவுண்டர் படத்தின் இடத்தை பிடிக்கவில்லை என்பது பல பலருடைய கருத்து. கிராமப்புறப் பகுதிகளில் ரஜினியை விட விஜயகாந்திற்கு ரசிகர்கள் அதிகம் என்பது ரஜினிக்கும் தெரிந்த உண்மை.
உதவும் மனப்பான்மை
திரைத்துறையில் மட்டுமன்றி, தனது உதவும் மனப்பான்மையாலும் விஜயகாந்த் மக்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமா தொழிலாளர்களுக்கு இலவச உணவு, உதவிகள் என அவர் செய்த நற்செயல்கள் பல. பின்னர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தே.மு.தி.க.) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அரசியலிலும் நுழைந்தார். அரசியலில் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம் என்றாலும், மக்கள் மத்தியில் அவர் என்றும் 'கேப்டன்' ஆகவே இருந்தார்.
கேப்டன் பிரபாகரன் - ரீ-ரிலீஸில் வசூல் சாதனை
விஜயகாந்தின் 100-வது படமாக, 1991-ல் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே அதன் வசூல் ஏறிக்கொண்டே போகிறது. கடந்த 8 நாட்களில், இந்தப் படம் சுமார் ₹15 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கூலியுடன் ஒப்பீடு
அதே நேரத்தில், ரஜினியின் புதிய படமான 'கூலி', கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் சுமார் ₹6 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலம், விஜயகாந்த் தான் இன்றும் வசூல் மன்னன் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விஜயகாந்த் மறைந்த பிறகும்கூட, அவரது படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றால், அது அவர் மக்கள் மனதில் பெற்றிருக்கும் நீங்காத இடத்தையே காட்டுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications