கேரவனில் ஜோதிடர்.. ஜீவனுள்ள பிரபலம்? மாம்பழம் நடிகையின் மூடநம்பிக்கை: உடைத்து பேசிய பாலாஜி பிரபு
சென்னை: நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ டாக்குமென்ட்ரி விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.. ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' பட காட்சிகளையும் நயன்தாரா இணைத்துள்ளாராம்.. இதனை நீக்கக் கோரி, சம்பந்தப்பட்டவர்கள், ஹைகோர்ட்டுக்கு சென்றுள்ளனர். அந்த வழக்கில் விசாரணையும் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நயன்தாராவுக்கு பலத்த அடி காத்திருக்கிறது.. நயன்தாராவுக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்ததற்கு காரணம் விக்னேஷ் சிவன்தான்..விக்னேஷ் சிவனுக்கு தைரியம் வரக் காரணம் நயன்தாராதான்..

லேடி சூப்பர் ஸ்டார்
நாமதானே லேடி சூப்பர் ஸ்டார், நாம் எது வேண்டுமானாலும் செய்யலாம், யார் கேட்க போகிறார்கள்? என்று நினைத்து நயன்தாரா இப்படியெல்லாம் செய்து வருகிறார். இதன்விளைவுதான், இப்போது தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார், சந்திரமுகி பட தயாரிப்பாளர் தரப்பில் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
அனுமதியின்றி பிறருடைய பொருளை பயன்படுத்துவது தவறுதான்.. இதற்காக அவர்கள் கேட்கும் நஷ்ட ஈட்டினை தந்துதான் ஆக வேண்டும்.. இதெல்லாம் நயன்தாராவுக்கும் தெரியும். ஆனால், விக்னேஷ் சிவன் தந்த தைரியத்தினால்தான், நயன்தாரா இப்படியெல்லாம் செய்ததாக சொல்கிறார்கள்.
முரட்டு தைரியத்தில் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டுவிட்டார். நெட்பிளிக்ஸில் 20 கோடி நயன்தாரா பெற்றிருப்பதாகவும் சொல்கிறார்கள்.. சிலர் 30 கோடி என்கிறார்கள்.. சிலர் 75 கோடி என்கிறார்கள்.. இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
ஆனால், கோர்ட்டில் ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, உண்மை விவரம் தெரியவரும். நீதிமன்றத்திலும், வழக்கு தொடுத்தவர்களுக்கு உண்டான நஷ்ட ஈட்டினை தந்துவிடும்படியும் உத்தரவிடப்படலாம். தனுஷ், ஏபி இண்டர்நேஷனல் தவிர, வேறு யார் யார் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் தெரியவில்லை. வேறு என்னென்ன படத்தின் கிளிப்பிங்ஸை நயன்தாரா பயன்படுத்தியிருக்கிறார் என்றும் தெரியவில்லை.
சமீபகாலமாகவே நயன்தாராவை கோயில்களில் பார்க்க முடிகிறது.. இவருக்கு பின்னால் எந்த ஜோதிடர் இருக்கிறாரோ தெரியவில்லை.
மாம்பழம் மஞ்சள்
மாம்பழத்தை மஞ்சளில் தடவி, மடியில் கட்டி தூங்கினால் அனைத்து பிரச்சனையும் சரியாகும் என்று, ஒரு நடிகைக்கு சாமியார் சொன்னாராம்.. அதேபோல, இன்னொரு நடிகர் சிறப்பாக நடிப்பார்.. அவர் பிரபலமாக வந்திருக்க வேண்டியவர்.. கடைசியில் தன்னுடைய கேரவனிலேயே ஒரு ஜோதிடரை வைத்து கொண்டார்.. அந்த நடிகர் இப்போது ஈசிஆர் பக்கத்தில் இருக்கிறார்.. அவரை பற்றி பேசினால் என் "ஜீவனே" போயிடும்..
இப்படி சினிமாவில் ஜோதிடரை நம்பி கெட்டவர்களும் உண்டு.. முன்பு பிரபல டைரக்டராக இருந்தவர், தன்னுடைய வண்டிக்கு ரூ.500-க்கு மேல் பெட்ரோல் போட மாட்டாராம்.. அதற்கு மேல் பெட்ரோல் போடக்கூடாது என்று அவரது ஜோதிடர் சொல்லியிருக்கிறாராம்..
இப்போது விஷயம் என்னவென்றால், நயன்தாராவும் ஜோதிடரை வைத்திருக்கிறார்.. அந்த ஜோதிடர் சொல்படிதான் நயன்தாரா கேட்கிறாராம்.. அதனால்தான், நிலவிவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, சமீபகாலமாகவே கோயில்களுக்கு சென்று வருவதாகவும் சொல்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications