முகத்தில் நாணம்.. முற்றிலும் ஹேப்பி.. சைத்ராவுக்கு கல்யாணம்.. செம குஷி!
சென்னை: கொரோனாவினால் தள்ளிப் போயிருந்த பலரின் திருமணம் தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த மாதிரிதான் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டியின் எங்கேஜ்மென்ட் கலக்கலாக நடைபெற்றிருக்கிறது.
இவரின் போட்டோஸ் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நினைவு தான்.

மறக்க முடியாத நினைவுகள்
அது சாதாரண மக்களாக இருந்தாலும் சரி பிரபலமாக இருந்தாலும் சரி அதுவும் காதலித்து பல வருடங்களாக காத்திருந்து திருமணம் செய்து கொள்வது அது தனி சுகம் தான் என்று கூறியிருக்கிறார் சைத்ரா ரெட்டி. இவருடைய திருமணம் போன வருடமே நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

தள்ளிப் போன திருமணம்
மீண்டும் மே மாதம் நடத்தலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். அப்போதுதான் இந்த கோரானாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அப்போதும் தள்ளிப் போயிருக்கிறது .அதனால் மீண்டும் திருமணத்திற்கு திட்டமிட்டு தற்போது எங்கேஜ்மென்ட் தடபுடலாக முடித்திருக்கிறது. சீரியல் ஆக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி எல்லோரும் வில்லியை கழுவி கழுவி ஊற்றி கொண்டு இருப்பார்கள்.

நல்ல ரசிகர்கள்
எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும் அது அவர்களது நடிப்புக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். ஆனால் இவரை சீரியல்களில் கழுவி ஊற்றினாலும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் கில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டிக்டாக் பிரபலம்
டிக்டாக்கில் பிரபலமான இவர் செய்யும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் காமெடியாகவும் அழகாகவும் இருப்பதால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இவர் கன்னட சீரியல்களில் திரைப்படங்களிலும் நடித்து தற்போது தமிழ் சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதல்முதலில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கொஞ்ச நாள்கள் நடித்திருந்தார்.

பிடிச்ச ஹீரோயின்
ஹீரோயினியாக ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார். ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிப்பதை விடவும் வில்லியாக நடிப்பது தான் தனது திறமையை முழுமையாக வெளிக் காட்ட முடியும் என்று நினைக்கிறாராம். அதனால் வில்லியாக எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். இவருடைய ஹைட்டுக்கும், அழகுக்கும் இவருக்கு வில்லி வாய்ப்பு கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று யாரடி நீ மோகினி சீரியலில் இவரிடம் பேசி இருக்கிறார்கள்.

சைத்ராவுக்குள் முளைத்த காதல்
சைத்ரா ரெட்டியும் உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம் .அதன் பிறகுதான் என்ற சீரியலில் வெண்ணிலாவை பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறார் .ஆனால் ஆப் ஸ்கிரீனில் இருவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது . எப்பவும் ஜாலியாக இருக்கும் இவர் சூட்டிங் ஷாட் என்று வந்துவிட்டால் கேரக்டராகவே மாறி விடுவாராம். அழகாக தமிழ் பேசும் இவருக்கு பல லவ் ப்ரோபோசல் வந்தாலும் ராக்கேஷ் என்பவரை தான் ரொம்பவும் பிடித்திருந்தது.

காதலித்து திருமணம்
பிறகென்ன இருவரும் காதலில் விழுந்தனர். விழுந்த வேகத்தில் இருவரும் பல வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் வரை வந்து நிற்கிறார்கள். இருவருக்கும் அவர்களது ரசிகர்கள் வாழ்த்து மழையை கூறிவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவருடைய பிரண்ட்ஸ் தங்களுடைய வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்திருக்கிறார்கள். சந்தோஷமா இருங்க சைத்ரா ரெட்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications