நடிகை ஷபானாவுடன் எதற்காக சண்டை? முதல் முறை மனம் திறந்து பேசிய கயல் சைத்ரா.. உடைந்த ரகசியம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷபானா உடன் அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை சைத்ரா ரெட்டி, நக்ஷத்திரா, ரேஷ்மா போன்றோர் நண்பர்கள் ஆக இருந்தனர். ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது நடிகை ஷபானா தனியாக இருக்கிறார். இது பற்றி நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிற்குள் அடைந்திருக்கும் நிலையில் பல நடிகைகள் போட்டோ சூட் மூலமாக பிஸியாக இருந்தனர். அதிலும் அனைவரையும் வாவ் சொல்ல வைத்த போட்டோ சூட் என்றால் ஜீ தமிழ் கதாநாயகிகளின் நட்பு புகைப்படம் பெரியளவில் பேசப்பட்டது. தோழிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் கூறும் வகையில் இவர்களுடைய எதார்த்தமான போட்டோ ஷூட் சோசியல் மீடியாக்கள் எங்கும் எதிரொலித்தது.

தோழிகள் போட்டோ சூட்
பொதுவாக ஆண்கள்தான் நண்பர்களோடு ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு போட்டியாக நாங்களும் இருக்கிறோம் என்று ஜீ தமிழில் கதாநாயகிகளான ரேஷ்மா முரளிதரன், சைத்ரா ரெட்டி, நக்ஷத்திரா மற்றும் ஷபானா எங்கு சென்றாலும் கும்பலாக சுற்றி வந்தனர். இப்போது கூட தோழிகளின் ரீல்ஸ் வீடியோக்களில் இவர்களுடைய புகைப்படங்கள் தான் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த நேரத்தில் ஷபானா சீரியல் நடிகர் ஆரியனை காதலிப்பதாக அறிவித்தார். அவர்களுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது.
ஜீ தமிழ் நடிகைகள்
அடுத்ததாக சைத்ரா ரெட்டி, நக்ஷத்திரா, ரேஷ்மா என்று இந்த ஜோடி இப்போது திருமண வாழ்க்கையில் கமிட்டாகி இருக்கிறார்கள். ஆனால் இந்த அணியில் இருந்து ஷபானா மட்டும் இப்போது பிரிந்திருக்கிறார். இதனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதனால் இவர்கள் பிரிந்து விட்டார்கள்? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்ட வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சைத்ரா ரெட்டி இதுகுறித்து பேசி இருக்கிறார்.
ஷபானாவுடன் பிரச்சனை
அதில் அவர் பேசும்போது, "ஷபானாவுக்கும் எங்களுக்கும் சின்ன கருத்து வேறுபாடு. அதை மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் என்று கூட சொல்லலாம். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் எங்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு வந்தது. அது நிரந்தரம் கிடையாது. நாங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவோம். இப்போதைக்கு என்ன என்று தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது அப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது.

நடிகை சைத்ரா ரெட்டி பேட்டி
எங்களுக்குள் இருக்கும் மனக்கசப்பு விரைவில் தீர்ந்துவிடும். ஆனால் பிரச்சனை வந்தது உண்மைதான். அது பெரிய அளவில் கிடையாது. எல்லா பிரண்ட்ஸுகளுக்கும் பிரச்சனைகள் எப்படி வருமோ அதே போல தான் எங்களுக்குள்ளும் வந்தது. நான் சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் ஷபானாவை பார்த்தேன் அப்போது நான் பேசிக் கொண்டேன், அவ்வளவுதான். எங்களுக்குள் எதிரியாக நாங்கள் நினைக்கவில்லை. அவர் அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று அந்த பேட்டியில் சைத்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சைத்ரா ரெட்டி நடித்த சீரியல்கள்
நடிகை சைத்ரா ரெட்டி ஆரம்பத்தில் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்தார். பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நக்ஷத்திராவுடன் நட்பு ஏற்பட்டது. அதேபோல ரேஷ்மா ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் எல்லோரும் இப்பொழுது வேற வேற சேனலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷபானா விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications