எதிர்நீச்சல் கதையில் மாற்றம்.. தொடர்ச்சியான சூட்டிங்.. அதிரடியான கதைக்களம்.. கிரேட் முயற்சி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடிகர் வேல ராமமூர்த்தி அறிமுகம் ஆகி ஒரு சில நாட்கள் மட்டுமே சீரியலில் வந்திருந்தார். இப்போது அவர் ஜெயிலில் இருப்பது போன்று காட்சிகள் அமைத்திருக்கின்றனர்.
ஆனால் வேலராமமூர்த்தி தொடர்ச்சியாக தான் நடித்து வரும் திரைப்படங்களில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் சீரியலில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் வேகமாக கதை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதை நேற்றைய எபிசோடில் காண முடிந்தது. அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி அங்கீகாரத்தை பெற்று தந்தது. ஆனால் திடீரென்று அந்த சீரியலில் குணசேகரனாக வாழ்ந்து வந்த மாரிமுத்துவின் மரணம் சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியல் தரப்பினருக்கும் பெருத்த அதிர்ச்சியையும், கஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவரைக்கும் கதை ஒரு போக்கில் போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று முக்கிய ஆணிவேரே சரிந்து விட்ட நிலையில் அதை அடுத்ததாக கதை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் சீரியல் தரப்பினார்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இனி குணசேகரன் கேரக்டர் வைக்கவா வேண்டாமா என்று குழப்பத்தோடு சீரியல் தரப்பினர் இருந்தனர். அதே நேரத்தில் குணசேகரனுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே புதிய கேரக்டரையும் தேடிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வேலராமமூர்த்தி இந்த சீரியலில் கமிட்டாகி இருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த சீரியலில் தொடர்ச்சியாக வர முடியாது என்பதை அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதுபடியே ரசிகர்கள் எதிர்பார்த்தது போல குணசேகரன் ஆக வேலராமமூர்த்தி அறிமுகம் செய்துவிட்டு அவர் தற்போது ஏழு நாட்கள் ஜெயிலில் காவலில் இருப்பது போன்று காட்சிகளை கொண்டு போயிருக்கின்றனர். அதே நேரத்தில் இனி மற்றவர்களை வைத்து கதை வேகமாக நகர இருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வில்லனாக இருந்தாலும் வீட்டு பெண்கள் வைத்து தான் கதை இருக்கிறது.
இப்போது இந்த ஏழு நாட்களுக்குள் தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி முன்னேறுகிறார்கள் என்பதுதான் வேகமாக வர இருக்கிறது.இத்தனை நாட்களும் ஜனனி வீட்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறேன். தன்னுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் இப்போது அவருடைய அப்பா வீட்டிற்கு வந்து ஜனனியிடம் சவால் விட்டிருக்கும் நிலையில் ஜனனியும் தன்னுடைய தந்தையிடம் தான் சக்தியோடு சேர்ந்து வாழ்க்கையில் ஜெயித்து காட்டுவேன் என்று சபதம் போட்டிருக்கிறார்.
இதுவரைக்கும் டயலாக்கே இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கும் சக்தி நேற்றைய எபிசோடிலும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார். ஆனால் சக்திக்கு பதிலாக ஈஸ்வரி நாச்சியப்பனை நாக்கு பிடுங்குகிற மாதிரி கேள்விகளை கேட்டிருந்தார். இது நாச்சியப்பனுக்கு மட்டுமல்லாமல் நாச்சியப்பனை போல வீட்டு பெண்களை தங்களுடைய இஷ்டத்திற்கு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
தங்களுக்கு பிடித்தால் வாழனும். இல்லையென்றால் வீட்டை விட்டு வந்து விட வேண்டும். தனக்கு பிடித்தது தான் படிக்க வேண்டும். தங்களுக்கு பிடித்த வேலையை தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பெற்றோர்களுக்கு நேற்று தரமான செருப்படி கிடைத்தது.குணசேகரன் காட்சிகளில் இல்லை என்ற குறையை நேற்றைய எபிசோட்டில் ஈஸ்வரியும், ஜனனியும் தீர்த்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அப்பத்தா கையில் டாக்குமெண்டோடு பேசிக் கொண்டிருக்கிறார். இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. இனியாவது ஜனனி எப்போதும் போல வாய் சவடால் விட்டு வாயாலேயே வடை சுட்டுக் கொண்டு இருக்காமல் அடுத்ததாக அவருடைய முன்னேற்றத்தில் பதில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதுபோல குணசேகரன் சொல்லின் படி கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டுப் பெண்களை இருகப் பிடித்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்து வீட்டு பெண்களும் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கினால் தான் சீரியல் இன்னும் வேகம் எடுக்கும். அதற்கு உரித்தான கதை இப்போது தொடங்கி இருக்கிறது. சில நாட்களாக அறுவையாகவே இருந்த எதிர்நீச்சல் நேற்றைய எபிசோடில் உத்தியோகம் கொடுப்பது போன்று இருக்கிறது. இதே வேகம் இனி வரும் எபிசோட்டில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications