பத்மஸ்ரீ விருது பற்றி நெகிழ்ந்து பேசிய செஃப் தாமு.. ஆனால் வெங்கடேஷ் பட் இப்படி செய்யலாமா? குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்த நிலையில் நேற்று பல துறைகளில் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. அதில் செஃப் தாமுவுக்கும் விருது வழங்கப்பட்டிருந்தது. அது குறித்து அவர் நெகிழ்ந்து பேசி இருந்தார். ஆனால் அவருடைய நண்பர் வெங்கடேஷ் பட் அவருக்கு வாழ்த்துக்கள் கூட தெரிவிக்கவில்லை என்பது பலருடைய கமெண்ட்ஸாக இருக்கிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகர் அஜித்குமார் போன்றவருக்கு பத்ம பூஷன் விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மாவால் வழங்கப்பட்டது. அதுபோல பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Ajith Kumar Padmabhushan

செஃப் தாமு நெகிழ்ச்சி

தாமுவிற்கு விருது வழங்கும் போது அவருடைய குடும்பத்தினர் எழுந்து நின்று எமோஷனலாக பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் விருது வாங்கியதும் அது குறித்து செய்தியாளர்களிடம் செப் தாமுப் பேசி இருந்தார். அப்போது மனுஷனாக பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்னு சொல்லுவாங்க. இந்த பத்மஸ்ரீ விருதை பெற்றதை நான் சாதித்ததாக நினைக்கிறேன். நாட்டின் பெருமை மிகுந்த விருது இது. வாழ்நாள் சாதனை விருது வழங்க அழைத்த போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.

செஃப் தாமு பேட்டி

அதுவும் எனது சமையல் துறையில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த விருதை தமிழ்நாட்டில் இருந்து வாங்கிய முதல் நபர் என்ற பெருமை எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு முன்பு இதே துறையில் இருந்து ஒருவர் வாங்கி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதல் முறையாக வாங்குகிறேன்.

பிரபலங்களின் வாழ்த்துக்கள்

எதிர்காலத்தில் என்னைப்போல சமையல் துறையில் நிறைய பேர் சாதனை செய்து இது போன்ற விருதுகளை பெற நான் ஒரு முன் உதாரணமாக அமைந்திருக்கிறேன். இந்த விருதை சமையல் கலைஞர்களுக்கும் என்னுடைய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். தாமுவுக்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மாதம்பட்டி ரங்கராஜன் பதிவு

அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாவோடு நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், இன்று எண்ணற்ற இதயங்களையும் சமையலறையையும் தொட்ட ஒரு உண்மையான புராண கதையை நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக சமையல் கலைஞர் தாமு அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

செஃப் தாமுவுக்கு உயரிய விருது

சமையல் கலைகள் மீதான உங்கள் இடைவிடாத ஆர்வம் அர்ப்பணிப்பு மற்றும் உலக அளவில் இந்திய உணவு வகைகளை மேம்படுத்துவதில் உங்கள் அயராத முயற்சிகள் உங்களை உண்மையிலேயே சிறந்த ஒரு கலங்கரை விளக்கமாக மாற்றி உள்ளன. நீங்கள் உணவை சமைத்து மட்டுமல்லாமல் நினைவுகளை வடிவமைத்து தலைமுறைக்கு வழிகாட்டி. எங்கள் வளமான சமையல் பாரம்பரியத்தின் மீதான உங்கள் அன்பின் மூலம் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறீர்கள்.

செஃப் தாமுவுக்கு விருது

இந்த அங்கீகாரம் உங்கள் சாதாரண பங்களிப்புக்கு ஒரு சான்றாகவும் மேலும் உங்களைப் போன்றும் மற்றும் மதிக்கும் அனைவருக்கும் ஒரு பெருமையான தருணமாகும். நீங்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் போது உங்களுக்கு இன்னும் வெற்றி மற்றும் ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறோம். இந்த பயணத்தில் உங்களுடன் பயணிப்பதில் பெருமை அடைகிறேன் அப்பா" என்று பகிர்ந்து இருக்கிறார். அதுபோல புகழ், குரோஷி,சுனிதா உட்பட பல பிரபலங்கள் தாமுவுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் செஃப் வெங்கடேஷ் பட் தாமுவிற்கு வாழ்த்துக்கள் கூறவில்லை.

Ajith Kumar Padmabhushan

வெங்கடேஷ் பட் விலகல்

தாமு குறித்து எந்த போஸ்ட்டும் போடவில்லை. இது குறித்து இணையத்தில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவருடைய கூட்டணியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும் செய்யும் அட்ராசிட்டி பார்ப்பதற்காகவே பலர் அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் கடந்த ஐந்தாவது சீசன் தொடங்கும் போது வெங்கடேஷ் பட் திடீரென்று தான் விலகுவதாக அறிவித்திருந்தார்.

வெங்கடேஷ் பட் போஸ்ட்

அதோடு பட்டு இல்லாத இடத்தில் அவருடைய நண்பரும் இருக்க மாட்டார் என்று ஒரு பதிவு போட்டு இருந்தார். அதுபோல தாமுவும் தானும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகப் போகிறேன் என்று கூறி போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் சில மணி நேரத்தில் அந்த போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார். பிறகு நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர போகிறேன் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. என்ன தான் நடக்கிறது என்ற குழப்பமும் இருந்தது.

ரசிகர்களின் கருத்து

ஆனால் இது வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு போன பிறகு நான் இப்போதும் தாமுவுடன் நட்பாக தான் இருக்கிறேன் ஆனால் அவர் எதற்காக அப்படி மாற்றி பேசினார் என்று எனக்கு தெரியவில்லை எதுவாயிருந்தாலும் நல்லதே நடக்கட்டும் என்று கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரம்யா பாண்டியனின் ரிசப்ஷனின் போது செஃப் தாமு மற்றம் வெங்கடேஷ் பட் இருவரும் ஜாலியாக பேட்டிகளில் கலந்து கொண்டனர் ஆனால் இப்போது தாமுவிற்கு பெரிய உயரிய விருது கிடைத்திருக்கிறது. அதற்கு வெங்கடேஷ் பட் ஒரு வாழ்த்து சொல்லவில்லை, என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து வெங்கடேஷ் பட் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+