இரட்டை மகிழ்ச்சி.. அஜித்தை சந்தித்தது பற்றி செஃப் தாமு நெகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. செஃப் தாமு, நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது செஃப் தாமு அஜித்தை சந்தித்தது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
பல துறைகளில் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் அஜித், செஃப் தாமு போன்றோர் பெயர்களும் அந்த வரிசையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், செப் தாமு உட்பட பலர் விருதுகள் பெற்றனர்.

செஃப் தாமு பதிவு
அப்போது அஜித்குமாரை சந்தித்தது குறித்து செஃப் தாமு இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் பத்மஸ்ரீ விருதை பெறுவதற்காக நான் சென்றபோது ராஷ்டிரபதி பவனில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். நானும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் குமாரும் ஒன்றாக பத்ம விருதுகளை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அஜித் குமார் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
செஃப் தாமு பேட்டி
அதே நேரத்தில் விருது வாங்கியதும் அது குறித்து செய்தியாளர்களிடம் செப் தாமுப் பேசி இருந்தார். அப்போது மனுஷனாக பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்னு சொல்லுவாங்க. இந்த பத்மஸ்ரீ விருதை பெற்றதை நான் சாதித்ததாக நினைக்கிறேன். நாட்டின் பெருமை மிகுந்த விருது இது. வாழ்நாள் சாதனை விருது வழங்க அழைத்த போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்டுப் போனேன். அதுவும் எனது சமையல் துறையில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த விருதை தமிழ்நாட்டில் இருந்து வாங்கிய முதல் நபர் என்ற பெருமை எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு முன்பு இதே துறையில் இருந்து ஒருவர் வாங்கி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதல் முறையாக வாங்குகிறேன்.

பிரபலங்களின் வாழ்த்துக்கள்
எதிர்காலத்தில் என்னைப்போல சமையல் துறையில் நிறைய பேர் சாதனை செய்து இது போன்ற விருதுகளை பெற நான் ஒரு முன் உதாரணமாக அமைந்திருக்கிறேன். இந்த விருதை சமையல் கலைஞர்களுக்கும் என்னுடைய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். தாமுவுக்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜன் பதிவு
அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமுவோடு நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், இன்று எண்ணற்ற இதயங்களையும் சமையலறையையும் தொட்ட ஒரு உண்மையான புராண கதையை நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக சமையல் கலைஞர் தாமு அப்பாவுக்கு வாழ்த்துக்கள்,என்று பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications