எவ்வளவு சண்டை போட்டாலும்.. அடி வாங்குனாலும்.. வெங்கடேஷ் பட் போஸ்ட்..ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியோடு சுற்றுலா போன இடத்தில் எடுத்த வீடியோக்களை பகிர்ந்து ஒரு மறைமுகமான கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசனாக நடுவராக இருந்தார். ஆனால் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவிப்பு விட்டு இருந்தார். அதோடு தன்னோடு செஃப் தாமுவும் வந்து விடுவார்.

நாங்கள் வேறொரு நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்தோஷப்படுத்த வருகிறோம் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். பிறகு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புது நடுவராக மாதம் பட்டி ரங்கராஜன் அறிமுகமாக, செஃப் தாமுவோடு நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட் சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பல கோமாளிகள் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருப்பதால் விஜய் டிவியை காப்பியடித்து டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கில்லி படம் பார்த்துட்டு காதலிக்கிறேன்னு மிரட்டிய லேடி.. பக்கத்தில் புருஷன்.. பிரகாஷ்ராஜ் ஓப்பன்
இதுகுறித்து வெங்கடேஷ் பட் மீடியா மேஷன் நிறுவனம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்தது. அந்த நிறுவனம் இப்போது விஜய் டிவியில் இருந்து வெளியே வந்து ஒரிஜினலாக புதிய நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் சில தினங்களாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இன்று அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தன்னுடைய மனைவியோடு வெளிநாட்டில் சுற்றுலா சென்ற போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சேர்த்து போஸ்ட் போட்டிருக்கிறார். அதற்கு “எவ்வளவு சண்டை போட்டாலும் பொண்டாட்டி அடிச்சாலும் அதை எல்லாம் தாங்கி சிரிக்கிறவன் தான் நல்ல புருஷன்” என்று வெங்கடேஷ் பட் கேப்ஷன் கொடுத்திருக்கும் நிலையில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஜனகராஜ்க்கு என்ன ஆச்சு? டாப் நடிகராக இருந்தவரு.. காக்கி உடையில்! ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கிய காட்சி
அதிலும் ஒரு ரசிகர் இந்த வீடியோவிற்கு வெங்கடேஷ் பட் சார் ரொம்ப அடி வாங்கி இருப்பாங்க போல என்று கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு வெங்கடேஷ் பட் டூ மச் மச்சி என்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் பட்டு சாரின் மைண்ட் வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று மாப்பிள்ளை இவன் எங்கயோ செமையா வாங்கி இருக்கிறான் என்று சொல்ல, அதற்கு வெங்கடேஷ் பட், அதான் நானே ஒத்துக்குறேன்னே அப்புறம் எதுக்கு மைண்டு வாய்ஸ் என்று சொல்லனும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்படியாக பல கமெண்ட்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அதற்கு வெங்கடேஷ் பட் பதில் கொடுத்து இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications