காதலனுடன் மறைவிடம் ஏன் போகணும்? செருப்பால அடிச்சிருக்கணும்.. அண்ணா பல்கலை விவகாரம் பற்றி MS பாஸ்கர்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் தமிழகமெங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இது தொடர்பாக தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அறிந்து தமிழகமே கொந்தளித்து கிடக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடைபாதையில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து போராட்டங்களை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை.. பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்.. உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது''
சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது யார் குற்றம்?
கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா?
காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா?
வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும்.
அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு தர முடியும்?
பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்..
மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை.
இதில் ஒருவேளை அரசைக் குறை கூறினால் அது நியாயமே இல்லை.
வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்" என்று தன்னுடைய அறிக்கையில் எம்எஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications