என் மனைவி திவ்யாவை நான் தாக்கவில்லை.. வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் அர்ணவ்வின் மனு தள்ளுபடி!
சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ணவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார்.

திவ்யாவை தாக்கியதாகக் கூறிவது தவறு என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சின்னத்திரையில் கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி மகராசி எனும் சீரியலில் நடித்து வருபவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தற்போது செவ்வந்தி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் செல்லமே சீரியலில் நடித்து வரும் அர்ணவ் எனும் நைனா முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை அவர் வயிற்றில் இருக்கும் கரு கலையும் அளவுக்கு எட்டி உதைத்ததாக திவ்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் அர்ணவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் திவ்யாவுக்கு வளைகாப்பு நடந்து அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அர்ணவ் கூறுகையில் என் குழந்தையை தூக்க முடியவில்லை. இதற்கு மேல் திவ்யாவுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை. ஆனால் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
என் குழந்தையை பார்க்க நேரில் நான் செல்ல முடியாது. சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. எனவே அந்த பெண் குழந்தையை எனக்கு வீடியோ காலில் காட்டினால் கூட போதும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார் அர்ணவ். ரசிகர்களும் உங்களுக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறது, ஈகோவை தூக்கி போட்டுவிட்டு உங்கள் குழந்தையை போய் பாருங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு தனக்கு உதவி செய்ய கூட யாருமில்லை என திவ்யா ஸ்ரீதர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications