"60 அடி கூந்தல் போல்"! தலை நிறைய மல்லிகைப்பூவுடன் Chubby Cheaksஇல் இருக்கும் இந்த நடிகை யார்?
சென்னை: தலை நிறைய மல்லிகைப்பூவுடன் chubby cheeks ல் இருக்கும் இந்த நடிகை யாரென்று தெரிகிறது. திரையுலக நட்சத்திரங்களின் unseen புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த முன்னணி நடிகையின் புகைப்படமும் வைரலாகிறது.

திரையுலகினர், கிரிக்கெட் பிரபலம், அரசியல் பிரபலங்களின் பழைய புகைப்படங்கள், சிறு வயது புகைப்படங்கள், unseen photos என வெளியாகின்றன. இவற்றை ரசிகர்களும் நெட்டிசன்களும் போட்டி போட்டுக் கண்டுபிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு புகைப்படம் உள்ளது. அது நடிகையின் சிறு வயது புகைப்படம்தான். இந்த புகைப்படத்தில் நெற்றியில் நிலா போல் மை பொட்டை வைத்திருக்கிறார். அது போல் கன்னங்களிலும் கருப்பு நிற மையால் திருஷ்டி பொட்டு இருக்கிறது.
60 அடி கூந்தல் போல் ஒற்றை பக்கத்தில் 1 முழம் மல்லிகை பூவை சரமாக வைத்திருக்கிறார். கன்னங்களில் குல்பை விழுந்திருக்கிறது. பார்க்கவே அழகாக இருக்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்த நடிகைதான். இவர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தமிழில் காலடி வைத்தார்.
இவர் விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாட்டு மிகவும் பிரபலம். 2017ஆம் ஆண்டு காதலித்து ஒரு தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது வாழ்க்கை ஆரம்பத்தில் ஜாலியாக போன நிலையில் இருவரும் 4 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் அந்த நடிகைக்கு தோலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக அவ்வப்போது உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. அப்போதெல்லாம் வலியால் தான் துடிப்பேன் என ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.
13 ஆண்டுகால சினிமாவில் நடித்து வரும் அவர் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் யார் என கண்டுபிடித்தீர்களா? இத்தனை க்ளூக்கள் கொடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எப்படி?

சரி கடைசியாக ஒரு க்ளூ கொடுத்தால் நீங்கள் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவீர்கள். ஆம்! அந்த நடிகை பல்லாவரத்துக்காரர்! என்ன யாரென்று தெரிகிறதா? ஆம்! சமந்தா ருத்ரபிரபுதான். தற்போது இருப்பதை போல் சிறிய வயதிலும் அழகாகவே இருக்கிறார்.
நடிகை சமந்தா அண்மையில் வெளியான சுபம் படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும் நடிகையாக இவர் கைவசம் பங்காரம் படமும் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom என்ற வெப் தொடரும் உள்ளது. இவர் யசோதா என்ற படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். சிசுவில் இருக்கும் குழந்தையிடம் இருந்து ஒரு திரவத்தை எடுத்து அதை வைத்து வயதானவர்கள் தோற்றமே வராத வகையில் ஒரு க்ரீம் தயாரிப்பில் ஈடுபடும் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சமந்தா நடித்திருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications