நகை, பணம் மோசடி.. ஓபனாக விளக்கம் கொடுத்த சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா! இது பலருக்கு பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதாவை சுற்றி தற்போது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நீண்ட பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஆதி என்ற நபர், ஸ்வேதாவுக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், பல பேட்டிகளிலும் "சின்ன மருமகள் சீரியல் நடிகை தான் என் மனைவி" என்று வெளிப்படையாகக் கூறி வந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்வேதா அப்போது மறுப்பு தெரிவித்து, "இந்த நபர் யார் எனக்குத் தெரியாது, இவர் ஒரு மோசடிக்காரர், இவரிடம் யாரும் ஏமாற வேண்டாம்" என்று எச்சரித்திருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகும் ஆதி தொடர்ந்து ஸ்வேதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதனால் இந்த விவகாரம் அடிக்கடி பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி கூட இந்த விவகாரத்தில் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். "ஸ்வேதாவின் கணவர் என்று கூறப்படும் ஆதி என்னிடம் நகையும் பணமும் வாங்கி ஏமாற்றிவிட்டார்" என்று அவர் போலீசில் புகார் அளித்தார். மேலும், சோசியல் மீடியாவிலும் வீடியோ வெளியிட்டு தனது குற்றச்சாட்டுகளை விளக்கியிருந்தார்.
தாமரை செல்வி தனது புகாரில் கூறியதாவது, "நான் சின்ன மருமகள் சீரியலில் நடித்த போது ஸ்வேதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் திருமணம் செய்ததால் வீட்டில் சேர்க்கவில்லை. அதனால் ஸ்வேதாவும் அவருடைய கணவரும் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஆதி என்னிடம் நகை மற்றும் பணம் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.
சீரியல் நடிகை ஸ்வேதா பதிவு
இந்த சூழ்நிலையில், ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக விரிவான ஒரு பதிவை வெளியிட்டு, இதுவரை நடந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் முன்பே கூறியபடி, நாங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு வெறும் 20 வயது தான். மிகவும் அனுபவமில்லாத வயது என்பதால், அவரைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயின. காலப்போக்கில் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன.
அவர் தன்னிடம் ஒரு வழக்கு இருப்பதாக கூறினார். அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில், அந்த வழக்கிற்காக நான் அதிகளவில் செலவழித்தேன். ஆனால் பின்னர் தான் அவர் கூறிய அனைத்தும் பொய்யானது என்று புரிந்தது. மேலும் அவருக்கு பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா
இதனால் இந்த உறவை தொடர முடியாது என்று நான் தெளிவாக முடிவு செய்தேன். அதன் பிறகு அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டது. நான் அவரை விட்டு விலகி என் குடும்பத்துடன் திரும்பி சேர்ந்தேன்.
நான் அவரை காதலித்ததால், அவர் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பி பணமும் நகையும் கொடுத்தேன். தற்போது அவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன். அது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதுவரை நான் அமைதியாக இருந்ததற்கு காரணம், இந்த பிரச்சனையை சட்டப்படி சமாளித்து வந்ததுதான். ஆனால் இப்போது தான் அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்பது முழுமையாக புரிந்துள்ளது.
முடிவுக்காக பெருமிதம்
நான் எடுத்த முடிவு சரியானது என்று நான் பெருமைப்படுகிறேன். நான் அவரை காதலித்ததால், எல்லா மேடைகளிலும் அவரை ஆதரித்தேன். ஆனால் அவர் என் காதலுக்கு தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
அவர் பலரையும் இதேபோல் ஏமாற்றியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் ஏற்கனவே அவரை நம்ப வேண்டாம் என்று எச்சரித்திருந்தும், இன்னும் சிலர் ஏமாறி வருகின்றனர்.
நான் மிகவும் மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். வேலைகளையும் நிம்மதியாக செய்ய முடியாமல் உள்ளது. நான் விலகிய பிறகும், வழக்கு தொடர்ந்த பிறகும் கூட அவர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.
எனவே அனைவரிடமும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் - அவரை நம்பி யாரும் ப்ரோமோஷன், போட்டோஷூட், விளம்பர வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். என்னைப் போல இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லாம் அவர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். நம்மால் செய்ய வேண்டியது நாமே செய்வோம். அதன் பிறகு கடவுள் நீதியை வழங்குவார் என்று நம்புகிறேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவின் இந்த நீண்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமான விவாதமாக மாறியுள்ளது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்













Click it and Unblock the Notifications