சின்னபூவே மெல்லபேசு.. பார்ப்பதற்கு மூடி டைப், ஆனால் சின்னகுழந்தை ஜெயச்சந்திரன்: உருகிய SA ராஜ்குமார்
சென்னை: பார்ப்பதற்கு மூடி டைப் போல தெரிவார் ஜெயச்சந்திரன். ஆனால் உண்மையிலேயே குழந்தை மனசுக்கு சொந்தக்காரர்.. இன்று அந்த வெண்கல குரலை இழந்துவிட்டோம்.. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்ஏ ராஜ்குமார்.
Wow Tamizha சேனலுக்கு பிரபல இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அப்பழுக்கற்ற தமிழ் உச்சரிப்புக்கு சொந்தக்காரரான, ஜெயச்சந்திரனை, என்னுடைய முதல் படமான "சின்னப்பூவே மெல்லப்பேசு" படத்தில், மெயின் பாடலை பாடவைக்க நினைத்தேன். என்னுடைய இந்த விருப்பத்தை டைரக்டரிடமும் சொன்னேன்.. தயாரிப்பாளர் கேயார், ராபர்பட் ராஜசேகர் உள்ளிட்டோர் என்னுடைய கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.

எனக்கு அப்போது வெறும் 22 வயதுதான்.. அந்த படத்திற்கு நான் இசையமைக்கும்போது, நான் என்ன கேட்டாலும், எந்த பாடகர் வேண்டும் என கேட்டாலும் அதற்கு சம்மதித்து, உடனடியாக ஏற்பாடுகளையும் எனக்கு செய்து தந்தனர்.
முதல் பாடல்: "சின்னப் பூவே மெல்ல பேசு" பாட்டை நான்தான் எழுதினேன்.. இந்த பாடல் வரியிலிருந்துதான், படத்தின் தலைப்பும் வைக்கப்பட்டது.. முதல்முதலில் நான் எழுதி இசையமைத்த பாட்டை ஜெயச்சந்திரன்தான் பாட வேண்டும் என்று விரும்பினேன். இந்த பாட்டு ரிக்கார்டிங்காக காலையிலேயே ஜெயச்சந்திரன் வந்துவிட்டார். ஆனால், ரிக்கார்டிங்கில் வேறு சில பிரச்சனையால் தாமதமாகிவிட்டது.
இதனால், பிஸியான பாடகரான ஜெயச்சந்திரன், ரொம்ப நேரம் காக்க வேண்டியதாயிற்று.. இதற்காக கொஞ்சம் கோபப்படவும் செய்தார்.. பிறகு நான் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு, பாட்டை சொல்லி தந்தேன். சிம்பிள் மெலடியான அந்த பாட்டை கேட்டதுமே, என்னை அளவுக்கு அதிகமாக பாராட்டினார்.
ஆண் குரல்: இந்த பாட்டை நான்தான் பாட வேண்டும் என்று ஏன் முடிவு செய்தாய்? என்று என்னிடம் கேட்டார்.. அதற்கு நான், உங்களால்தான் இந்த பாடலை முடியும், எனக்கு பிடித்த ஆண் குரல் உங்களுடைது என்று சொன்னேன். அதற்குபிறகு என்னை ஆசீர்வதித்துவிட்டு சென்றார்.. தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சூரியவம்சம் படத்துக்காக 1997-ல் கிடைத்தது.
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, வானத்தை போல படத்தில் காதல் வெண்ணிலா. பூவே உனக்காக படத்தில், சொல்லாமலே, இப்படி பல பாட்டுக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.. எனக்கு நல்ல பேரை வாங்கி தந்த பாடல்களை எல்லாம் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். கம்பீரம், இனிமை, எப்படி சொல்வதென்றே தெரியவில்லை அவரது குரலை..
குழந்தை மனசு: பார்ப்பதற்கு மூடி டைப் போல தெரிவார்.. ஆனால் குழந்தை மனசுக்கு சொந்தக்காரர்.. இன்று அந்த வெண்கல குரலை இழந்துவிட்டோம்.. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் எஸ்ஏ ராஜ்குமார்.












Click it and Unblock the Notifications