முத்துசெல்வியைத்தான் இந்த சின்னவரு கட்டிக்கணுங்க.. ஆமாங்க சொல்லிப் போட்டோமுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் பஞ்சம் பொழைக்க வந்த குடும்பம்தானுங்க முத்துச்செல்வி கண்ணு குடும்பம். அவிங்களுக்கு வேலை குடுத்து, வீடு குடுத்து போட்டு முத்து செல்வி, அய்யன், தங்கச்சிய வாழ வச்சு சோறு போட்டவருங்க சின்னவரு.

ஏனுங்க.. இது போதாதுங்களா.. அந்த புள்ளைக்கு டிராக்டர் ஓட்ட கத்துத் தர்றாராமா.. சரி இதையுங்கூட பரவால்லைன்னு வுட்டுப்போடலாம்.. ஒரு பொம்பளை புள்ளைக்கு வளையலு, நக பாலீஷு... வாங்கித் தர்றாப்ல.. இந்த முத்து செல்விக்கும் கொஞ்சம் கூட அறிவில்லீங்க.. கண்ணை கட்டிப் போட்டுக்கிட்டு, நெத்தியில குங்கும பொட்டு வைக்கறதாமா அந்த வெளையாட்டையும் வெளையாடி போடறாங்க.. .அதுல கெரகம் சின்னவரு கெலிச்சு, முத்துச்செல்வி கண்ணு நெத்தியில பொட்டு வச்சு போடறாருங்கோ .

நெசமா வகுத்த கலக்கிருச்சுங்கோ.. .இன்னொரு விஷியமுங்க.. சந்தைக்கு போயி ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி கணக்கா போட்டோ எடுத்து போட்டுக்கிட்டாங்க.. சின்னவருக்கு வந்துச்சு கெரகம் மேல கெரகம். கூரை சீலை, குங்கும சிமிழ், தாலின்னு சின்னவரு கையால முத்து செல்வி கண்ணுக்கு கொடுத்து போட.. இப்ப.. முத்து செல்வி கழுத்துல சின்னவரு தாலி கட்டி போடணும்னு ஊர்க்காரங்க நாக்கு மேல பல்ல போட்டு பேசறாங்க..

சின்னக்கவுண்டர்

சின்னக்கவுண்டர்

அட நம்ம நாட்டாமை, சின்ன கவுண்டர் படத்திலிருந்து காட்சிகள் வசனத்தை சுட்ட கண்மணி கதைக் குழு, கடைசியில கண்ணனை அதான் சின்னவரை சின்னத்தம்பி பிரபு ரேஞ்சுக்கு மாத்தி காட்டிபோட்டீங்களே...

வயசுக்கு

வயசுக்கு

கெரகம் இந்த காதலுக்கு ஏழை பாழைன்னு எல்லாம் தெரியாதுதானுங்களே... இந்த ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கும் முத்து செல்வி, சின்னவர் மேல ஆசைப்படறது எதை வச்சு தப்புன்னு சொல்றது சொல்லி போடுங்க...

இல்லாத புள்ளைங்க

இல்லாத புள்ளைங்க

அம்மா இல்லாத புள்ளைதானுங்களே முத்து செல்வி. ஆனா, பாருங்க ரவ்வூண்டு புள்ளை தங்கம், அக்காவுக்கு அம்மா கணக்கா ஆறுதல் சொல்லிப்போடுதுங்க.. நானும் கூட கண்ணுல தண்ணி வுட்டுட்டேனுங்க.

தண்ணி குடிச்சு போடணும்..

தண்ணி குடிச்சு போடணும்..

உப்பைத் திண்ணவன் தண்ணி குடிச்சு போடணும்னு விதி இருக்குது தானுங்களே..இப்போ முத்து செல்வியை சின்னவருதானுங்க கட்டிக்கோணும்.. அதுதானுங்க எங்க தீர்ப்பு. கெரகம்.. இல்லேன்னா எங்களுக்கு இந்த நாடகம் வேணாமுங்க.. நிறுத்தி போடுங்க.. ஒரே டென்ஷானவுது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+