இந்தியாவில் இருக்கும் “ஒரே நடிகன்” தனுஷ்.. அவரை போல யாராலும் முடியாது.. வெற்றி விழாவில் சிரஞ்சீவி புகழாரம்
சென்னை: நடிகர் தனுஷ் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான "குபேரா" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழை விட இந்த படத்திற்கு தெலுங்கில் அதிகமான பாராட்டு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் தனுஷ் பற்றி நடிகர் சிரஞ்சீவி பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவில் இருக்கும் எந்த நடிகரும் செய்யாத செயலை தனுஷ் செய்து இருக்கிறார் என்று சிரஞ்சீவி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றதுமே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் சேகர் கம்முலா தெலுங்கில் பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்து இருக்கிறது. இதனால் இந்த படம் அருமையாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே பலராலும் பாராட்டப்பட்டது. தமிழை விடவும் தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்திற்காக அதிகமாக காத்திருந்தனர்.

குபேரா வெற்றி விழா
அனைவரும் எதிர்பார்த்தபடியே கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. குபேரா திரைப்படத்தில் தனுஷ் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி இருக்கிறார். இதுவரைக்கும் இல்லாத வகையில் பிச்சைக்காரன் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். படம் வெளியானதும் பலர் தனுஷ் உடைய நடிப்பை பாராட்டி வருகின்றனர். சிலர் தனுஷ் என்னை இப்படி நடித்து விட்டார் என்றும் கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
குபேரா பட நடிகர்கள்
தனுஷுடன் நாகார்ஜுனாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை, பிச்சைக்காரனுக்கும் பணக்காரனுக்கும் நடக்கும் கதைதான். ஒரு பணக்காரன் தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக பிச்சைக்காரர்களின் பெயரில் டெபாசிட் செய்கிறார். அந்த பணத்தால் பிச்சைக்காரன் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
குபேரா பட கதை
ஏற்கனவே விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பதால் அதேபோல இந்த படமும் இருக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நாளே தமிழை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் குபேரா படத்தை அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே தெலுங்கில் தனுஷ் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் இது அவருடைய இரண்டாவது படம்தான் இந்த படம் இப்போது அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கொடுத்திருக்கிறது.
நான்கு தேசிய விருதுகள்
குபேரா படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அவரை பார்த்ததும் நடிகர் தனுஷ் அவருடைய காலில் விழுந்து வழங்கி இருந்தார். அதை தொடர்ந்து தனுஷை பற்றி நாகார்ஜுனா பேசும்போது எனக்கு தனுஷை பற்றி என்ன பேசுறதுன்னு தெரியல. ஏற்கனவே நான்கு விருதுக்கு சொந்தக்காரர் நான் இப்போ ஏதாவது பேசி அது மிகவும் குறைவு என்பது போல வந்து விடக்கூடாது என்று பேசி இருந்தார்.
வியப்பு
அதை தொடர்ந்து சிரஞ்சீவி பேசியிருந்தார் அதில் அவர் பேசும் போது எனக்கு தனுஷை பார்க்கும்போது இது தனுஷா அல்லது அந்த கேரக்டரா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு சூட்டிங் ஸ்பாட்டில் அந்த கேரக்டராகவே மாறி இருந்தார். எல்லாவற்றையும் லெப்ட் கேண்டில் டீல் செய்தார் என்று பாராட்டி இருந்தார்.
சிரஞ்சீவி பேச்சு
மேலும் சிரஞ்சீவி பேசும்போது "இந்த படத்தை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தனுஷை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. என்னை நடிக்க கேட்டிருந்தால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி இருப்பேன். இதனை நடிக்க "இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு நடிகன் தனுஷ் மட்டும் முடியும். தனுஷ் கண்டிப்பாக இந்த படத்திற்காக உங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க வேண்டும்" என்று சிரஞ்சீவி தனுஷை பாராட்ட தனுஷ் சந்தோஷத்தில் வாய் பேச முடியாமல் கை எடுத்து கும்பிட்டபடி அமைதியாக இருந்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications