சித்ராவை கஷ்டப்படுத்துனவங்க பைத்தியம் பிடிச்சு தெருவுலதான் திரிவாங்க.. ரீல் அம்மா கதறல்!
சென்னை: சித்ராவைக் கஷ்டப்படுத்தியது யாராக இருந்தாலும் சரி, மனநிலை பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தெருவுல திரிவாங்க என்று வேதனையோடு கூறியுள்ளார் சித்ராவின் சீரியல் அம்மா.
முல்லையாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தது போல தான் சித்ரா அவரது சீரியலில் கூட நடிக்கும் நடிகர்களிடமும் வாழ்ந்திருக்கிறார். தற்போது அந்த சீரியலில் சித்ராவின் அம்மாவாக நடித்து வந்த சாந்தி வில்லியம்ஸ், சித்ராவை இழந்து பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளாராம்.
சித்ராவை கஷ்டப்படுத்தி இந்த நிலைக்கு தள்ளியவர்கள் சத்தியமாக நல்லாவே இருக்க மாட்டார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தெருவில் பிச்சை எடுத்துதான் வாழ்வார்கள் என்று சாபமிட்டு இருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

முல்லைக்கு அம்மா
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லைக்கு அம்மாவாக நடித்த சாந்திக்கு ஏற்கனவே அவரது மகன் சமீபத்தில்தான் இறந்துள்ளார் .அந்த துயரத்திலிருந்து அவர் மீண்டு வருவதற்குள் அந்த சீரியலில் எனது மகளாக நடித்து வந்த சித்ராவும் இறந்துவிட்டார் என்று வேதனையோடு கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய கண்களில் கண்ணீர் எல்லாம் வற்றி போச்சு கஷ்டத்தை மட்டுமே பார்த்து வரும் எனக்கு சித்ரா தான் ஒரு மகளாக இருந்து ஆறுதலாக இருந்தார் .

நிஜமான மகளாக இருந்தார்
எனக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் சித்ரா தான் என்னை பொறுப்பாக பார்த்துக் கொண்டார் .அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .அவரை மார்ச்சுவரியில் பார்க்கும் நிலைமை வந்ததும் எனது நெஞ்சே வெடித்து போய் விட்டது .அந்த அளவிற்கு தான் கஷ்டப்பட்டு வருகிறேன் .நிம்மதியாக தூங்க கூட முடியாமல் தவித்து வருகிறேன் என்று தனது கண்ணீரை கட்டுப்படுத்தி கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாசத்தைக் கொட்டியவள்
எனக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட வீட்டிற்கே வந்து விடுவார். ஹாஸ்பிடலுக்கு போனீங்களா என்று என்னை பக்கத்தில் இருந்து என் பிள்ளைகளை விடவும் பாசமாக பார்த்தவள். எனது வீட்டின் ஜன்னல் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் அடிக்கடி சன்னலில் வந்து உட்கார்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பாள். அந்த இடத்தை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது.

நல்லாவே இருக்க மாட்டாங்க
இப்போது நான் பெற்ற பிள்ளை இறந்த துயரத்தில் இருக்கும் அதிலிருந்தே வெளியே வராத நேரத்தில் பெற்ற பிள்ளையை விடவும் பாசத்தை காட்டிக்கொண்டிருந்த பிள்ளையும் பறிகொடுத்து விட்டேன் வேதனையோடு கூறியிருக்கிறார். எப்போதுமே சந்தோசத்தையும் நம்பிக்கையும் ஊட்டிக் கொண்டிருந்த அவளுக்கு இந்தளவிற்கு துரோகத்தைப் பண்ணுனவர்கள் கண்டிப்பாக நன்றாகவே இருக்கமாட்டார்கள் .

என்னிடம் எதுவுமே சொல்லலியே
அவள் யாரையும் மனதால் கூட கஷ்டப்படுத்த மாட்டாள் .ஆனால் அவள் மனது இந்த அளவிற்கு உடையும் அளவிற்கு செய்தவர்கள் கடவுள் சும்மா விடமாட்டார் என்று கூறியிருக்கிறார். எப்போதுமே என்னிடம் எல்லா விஷயத்தை சொல்பவள் கொஞ்ச நாட்களாக நான் எனது மகனை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் நிலையில் என்னிடம் எதுவுமே சொல்லாமலே இருந்து விட்டாள்.

என்னை மாற்றியவள்
எனது வீட்டிற்கு அவர் பல முறை வந்திருந்தாலும் எனது கையாலேயே அவளுக்கு சமையல் செய்து ஊட்டி விட்டிருக்கிறேன் .சூட்டிங் ஸ்பாட்டில் நான் மன கவலையோடு இருந்தாலும் என்னை சகஜமாக்க அடிக்கடி டிக்டாக் வீடியோ எடுப்போம். வாங்க டான்ஸ் ஆடுங்கள் என்று என்னை பாடாய் படுத்தி ஜாலி பண்ணி விடுவாள் . எனது மனநிலையை அவள் இருக்கும் போது அப்படியே மாற்றி விடுவாள் .

மனசு ஆறலை
அவள் இல்லாத அந்த சூட்டிங் ஸ்பாட்டில் என்னால் இருக்கவே முடியவில்லை. எங்கு பார்த்தாலும் அவளது முகம் தெரிகிறது .நான் வயசாகிவிட்டது டிக் டாக் எடுக்க வரவில்லை என்று சொன்னால் கூட என்னை விடவே மாட்டாள் எனது ஒவ்வொரு கஷ்டத்திலும் சந்தோசமாக மாற்றியவள் அவள்தான் என்று கூறியுள்ளார் சாந்தி வில்லியம்ஸ். ஒரு தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினறும் ரசிகர்கள்
சித்ரா இறந்து சில நாட்கள் கழித்தும் கூட அவரது நினைவுகளையும் அவர் இறந்துவிட்டார் என்னும் செய்தியை இன்னமும் நம்ப முடியாமல் தான் பலரும் தவிர்த்து விடுகிறார்கள் . ரசிகர்களுக்கு திரையில் பார்த்த அவரை மறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது அவர் கூடவே இருந்தவர்களுக்கு எந்த அளவு கவலை இருக்கும் என்பதை இவருடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications