எப்போதும் இளமையா இருக்கணும் என்றால், தேங்காய் எண்ணெயை கூட... எதிர்நீச்சல் ரேணுகாவின் டிப்ஸ்

என்னோட பர்பெக்ட் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். முகத்தை இயற்கையாகவே பளபளக்கும். மேக்கப் ரிமூவர் ஆகவும் யூஸ் பண்ணலாம் - பிரியதர்ஷினியின் பியூட்டி டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடித்துவரும் பிரியதர்ஷினி தன்னுடைய அழகின் ரகசியத்தை கூறியிருக்கிறார்.

எத்தனை வயது ஆனாலும் முகம் பளபளப்பாக இருப்பதற்கு தான் எந்த மாதிரி மெயின்டனன்ஸ் செய்கிறேன் என்ற ரகசியத்தை முதல் முறையாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் எல்லா கிரீம் யூஸ் பண்ணுனா இரண்டு நாள் முகத்தை ஃப்ரீயா விடணும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மாறாத அதே அழகு

மாறாத அதே அழகு

ஒரு தொகுப்பாளராக அறிமுகமாகி பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தற்போது இவருக்கு 44 வயது என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது. இன்றும் அதே இளமையோடு தான் இவர் இருந்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய நடிப்பையும் அழகையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் மட்டும் எப்படி அப்படியே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக இவர் கோலங்கள் சீரியலில் எப்படி இருந்தாரோ, அதேபோலத்தான் இப்போது எதிர்நீச்சல் சீரியலிலும் இருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

முகத்தை கழுவுங்கள்

முகத்தை கழுவுங்கள்

இந்த நிலையில் தன்னுடைய அழகிற்கு காரணம் தன்னுடைய சரும பராமரிப்பு என்றும் அது பற்றி தன்னுடைய ரசிகர்களிடமும் விரிவாக பேசியிருக்கிறார். அதை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அதில் உங்க சருமத்தை ரொம்ப பத்திரமா பார்த்துக்கோங்க. நான் அப்படித்தான் பார்த்துக்கிறேன். சரும பராமரிப்பு எப்பவும் நாம தூங்கப் போகும் போது இருந்து ஆரம்பிக்க வேண்டும். நம்ம என்னெல்லாம் சாப்பிடலாமோ அதை எல்லாமே நம்ம முகத்துக்கு அப்ளை செய்யலாம். முதலில் உங்களுடைய சருமத்தை சுவாசிக்க விடுங்க, அதுக்கு முதல்ல முகத்தை நன்றாக கழுவுங்க. நம்ம முகத்துல என்ன அழுக்கு இருக்குன்னு நமக்கு தெரியாது. அதனால ஆயில், ஃபோம் என இரண்டு விதமாக கிளிசர்ல உங்களுக்கு எது செட் ஆகுதோ அதை யூஸ் பண்ணி முகத்தை கழுவுங்க என்று கூறியிருக்கிறார்.

இரவு முக பாதுகாப்பு

இரவு முக பாதுகாப்பு

அது மட்டும் இல்லாம நைட்டு முகத்தில் கிரீம் போட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில நாள் முகத்தில எதுவும் போடாமல் இருக்கிறது தான் சிறந்த பராமரிப்புக்கான வழி ஆனாலும் நீங்க விருப்பப்பட்டால் நைட் கிரீம் அப்ளை பண்ணிக்கலாம். அடுத்த பிரச்சனை அண்டர் ஐ டார்க் சர்க்கிள். ஐ கிரீம் பொருத்தவரை கம்மியா தான் யூஸ் பண்ணனும். அப்பதான் அது வேலை செய்யும். நிறைய போடாதீங்க என்று கூறியிருக்கிறார். அதோடு என்னோட சரும பராமரிப்பு என்னன்னா ஒரு ரெண்டு நாள் எல்லா கிரீம் யூஸ் பண்ணுனேன் என்றால் இரண்டு நாள் ஃப்ரீயா விட்டுடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

தேங்காய் எண்ணெயின் பயன்பாடு

தேங்காய் எண்ணெயின் பயன்பாடு


அதுமட்டுமல்லாமல் இதைவிட எல்லாம் என்னுடைய சீக்ரெட் என்ன என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். இது உங்க முகத்தை இயற்கையாகவே பளபளப்பாக்கும் ஒரு பொருள். மேக்கப் ரிமூவர் ஆகவும் யூஸ் பண்ணலாம். என்னுடைய பவுண்டேஷன் கூட ஒரு ட்ராப் தேங்காய் எண்ணெய் போட்டு அப்புறமாக அப்ளை பண்ணுவேன். தேங்காய் எண்ணெய் கூட லாவண்டர், ஆரஞ்சு, லெமன், பிரஸ் பெப்பர்மென்ட் ஆயில், ஜெரனியம், ஒரிகனா ஆயில் மிக்ஸ் பண்ணி முகத்திற்க்கும், முடிக்கும் அப்ளை பண்ணுவேன். இதுதான் என்னுடைய அழகு பராமரிப்பு என்று இவர் விளக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் இவருடைய ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+