கூட்டை விட்டு வந்த விஜய்.. "கௌதம சித்தார்த்" உணர்ந்த உண்மை.. ஜன நாயகன் பஞ்சாயத்து வந்துருமோ: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: விஜய்யின் ரசிகர்களின் மனநிலைமையை தொண்டர்களின் மனநிலைமைக்காக மாற்ற வேண்டுமானால், விஜய்யே களத்தில் நேரடியாக இறங்க வேண்டும்.. அவரே தன்னுடைய தன்னுடைய தொண்டர்களின் ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து, மனம் விட்டு பேச வேண்டும். இதைத்தவிர வீடியோவாக வெளியிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வந்திருந்தார்.. அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் அவினாசி ரோட்டில் திரண்டு சென்று விஜய்யை காண குவிந்தது.

Television Vijay Jana nayagan

இதற்கு பிறகு விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

பர்சனலா பேச விரும்பறேன்

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.

உங்க அன்ப நான் மதிக்கறேன். இனி எப்பவும் மதிப்பேன். அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க. தப்பே இல்ல.

தனிமனித ஒழுக்கம்

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் தனிமனித ஒழுக்கமும் 100 சதவீதம் சமரசமற்றதாகத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க, செய்றீங்க என்றெல்லாம் அந்த அறிக்கையில் விஜய் கூறியிருந்தார்.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியபோது, "
கௌதம சித்தார்த்தர் என்பவர் இளவரசராக இருக்கும்வரை வெளியுலகம் தெரியாமல் இருந்தார்.

கௌதம சித்தார்த்தர்

வெளியுலகம் தெரிந்தபிறகுதான் அவர் புத்தராக மாறினார்.. ஏறக்குறைய விஜய்யும் அப்படித்தான். இப்போதுதான் வெளியே வந்துள்ளார்... தன்னுடைய ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதை அறிந்துவருகிறார்.

ஆரம்ப காலத்திலிருந்தே, விஜய்யின் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் அவருக்கு தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல் இருந்தது. இதற்கு காரணம், முழுக்க முழுக்க அவையெல்லாம் எஸ்ஏசியின் கட்டுப்பாட்டில் இருந்தன.. தன்னுடைய அப்பா சொல்வதை, மட்டும் விஜய் அப்படியே செய்து கொண்டிருந்தார்.. தன்னுடைய ரசிகர் மன்றம் ஷோ பற்றிகூட விஜய்க்கு அப்போது தெரியாமலேயே இருந்தது. இப்படி வெளியுலகமே தெரியாமல் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவர் விஜய்..

கோவை கூட்டம்

தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கை நிறைய விஷயத்தை விஜய்க்கு புரியவைத்துள்ளதாக தெரிகிறது.. அதாவது அன்று அஜித் சொன்னதையெல்லாம் விஜய் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.. அன்று விஜய் செய்ததையெல்லாம் அஜித் இன்று செய்து கொண்டிருக்கிறார்.. தற்போது அரசியல் நிகழ்வுக்காக வெளியே வந்தபோதுதான், நடைமுறை சிக்கல் என்ன ? சூழ்நிலை என்ன ? தனக்கான கூட்டம் யார்? என்பது விஜய்க்கு தெரிகிறது.

கோவைக்கு வந்திருந்த கூட்டத்தில் பல பேர் ரசிகர்களின் மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதும் தெரிந்துள்ளது.. அதன் வெளிப்பாடுதான் அறிக்கையாக வெளிவந்துள்ளது.. ஆனால், இப்படியொரு அறிக்கை வெளியிட்டதை வீடியோவாக பேசி வெளியிட்டிருந்தால், அதன் வீச்சு, தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும்.

அதேபோல, ரசிகர்களின் மனநிலைமையை தொண்டர்களின் மனநிலைமைக்காக மாற்ற வேண்டுமானால், விஜய்யே களத்தில் நேரடியாக இறங்க வேண்டும்.. அவரே தன்னுடைய தன்னுடைய தொண்டர்களின் ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து, மனம் விட்டு பேச வேண்டும். இதைத்தவிர வீடியோவாக வெளியிட வேண்டும்.

மே 15 முதல் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள போவதாக தெரிகிறது. இதனால் விஜய்க்கான கிரேஸ் மேலும் அதிகரிக்கக்கூடும்.. இவையெல்லாம் ஜனநாயகன் படத்துக்கான மிகசிறந்த ஓபனிங் கிடைக்கும். இப்போதே அந்த படத்துக்கு ரூ.370 டேபிள் பிராஃப்ட் கிடைத்துள்ளது.. ஆனால், படத்தை ரிலீஸ் செய்வார்களா? ரிலீஸ் செய்ய விடுவார்களா? பஞ்சாயத்து வருமா? அதற்கு விஜய் என்ன சொல்வார்? என்பதெல்லாம் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+