For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாருங்கள் கேளுங்கள்.. பற்பல குரல்கள்... ஒன்று சேர்ந்து ஒரே மேடையில்...!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் சிங்கிங் ஸ்டார்ஸ் என்று இரு குரல் ஓர் உணர்வு என்று பெரும் இசை நிகழ்ச்சியின் போட்டி நடைப்பெற்று வந்தது.

இரு குரல் ஓர் உணர்வு என்றால்.தங்களுடன் இணையாகப் பாட தனக்கு பிடித்த யாரையும் அழைச்சுட்டு வரலாம். ரெண்டு பேரும் ஒரே பாடலைப் பாட வேண்டும்.

colors tvs singing stars rocking

கிகி மற்றும் விஜய் ஆகிய இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறாரார்கள். 14 ஜோடி போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கி இப்போது கிராண்ட் ஃபினாலே வரைக்கும் வந்துள்ளது.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், பின்னணி பாடகர்கள் சக்தி , அனந்த் ஆகியோர் போட்டியின் நடுவார்கள்.. போட்டியாளர்கள் தங்களது இசை பாடல்களையும், பாடும் பாணியையும், ஒற்றுமையையும் கலப்பதை அடிப்படையாகவைத்து பாடும்பாடலை ஜட்ஜ் செய்வார்கள்.

colors tvs singing stars rocking

மே 28 அன்று நிகழ்ச்சியின் இறுதி சுற்று மிகப்பிரமாண்டமாக ஆடல் பாடல் என்று களைக்கட்ட உள்ளது.

கானா கோகிலவாணி இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் அடைந்துள்ளார்.திருமணம்முடிந்த கையோடு ஒரு போட்டியில் கலந்து கொண்டதும் தனி சிறப்பு

colors tvs singing stars rocking

ஃபிரான்சில் இருந்து வந்திருந்த ஒரு பெண் அவ்வளவு அழகாக நமது தமிழ் நாட்டு பையனுடன் சேர்ந்து தமிழ் பாடல்களைப் பாடி போட்டியாளரானார். ஆனால், தமிழ் பேச தெரியாது.இப்படி இந்த நிகழ்ச்சியில் சுவையான சம்பவங்கள் பல.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 30 மே மற்றும் ஜூன் 1, 8:00 முதல் 9:30 மணி வரை இந்த சிறப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் நமது டிவியில் பார்க்கலாம். Voot ஆப்பிலும் பார்த்து மகிழலாம்.

கலர்ஸ் தமிழ் தமிழ்: பிப்ரவரி 2018 ல் தொடங்கப்பட்டது, இது பொழுதுபோக்கு சேனலாகும், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விக்கவும், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், கொண்டாடக்கூடிய வகையிலும் தொடங்கப்பட்ட தனித்துவமான சேனல்.

English summary
Colors competed in the big concert of the two songs called Singing Stars in Tamil TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X