பிரபல நடிகைக்காக ஸ்பாட்டிலேயே சண்டை போட்ட 2 பேர்.. ஒல்லியான நடிகருடன் நடிக்க மறுத்த சிரிப்பு நடிகை
சென்னை: கவுண்டமணி சார், ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்துக்காக 50 நாள் கால்ஷீட் தந்தார்.. அதில் அவருக்கு வெட்டியான் கேரக்டர்.. 50 நாள் தேதி தந்துட்டு, வெறும் 5 லட்சம்தான் என்னிடம் சம்பளம் வாங்கினார்.. அந்த நேரத்தில் ஒருநாளைக்கே 3 லட்சம் வாங்கிட்டு இருந்தார் கவுண்டமணி சார். அந்தவகையில் பலமுறை எனக்காக உதவியவர் கவுண்டமணி சார் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் பிரபல டைரக்டர் வி.சேகர்
Channel 5 Cinema என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வீ.சேகர், "பாக்யராஜ் சாரிடம் உதவியாளராக இருந்து, படம் எடுப்பதற்காக வெளியே வந்த சாதாரண நபர்தான் நான்..

பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தாலே அவர்கள் பெரிய ஆள்தான்.. ஆனாலும் நான் முதன்முதலில் எடுத்துக் கொண்ட நீங்களும் ஹீரோதான் சப்ஜெக்ட் சற்று கடினமானது.. அது அவர்களை பாதிக்கும் என்பதால், எல்லா ஹீரோக்களுமே நடிக்க முன்வரமாட்டார்கள்..
கரகாட்டகாரன்
நம்பியார், வீரப்பன் போன்றோர்தான் துணிந்து என்னிடம் வந்தார்கள்.. அப்போதுதான், கவுண்டமணி செந்தில் என்னுடன் இணைந்தார்கள்.. அப்போது கரகாட்டக்காரன் படம் சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது.. அந்த நேரத்தில் கவுண்டமணி செந்திலுக்கு செம டிமாண்டு..
இருவருமே பீக்கில் இருந்தனர்.. அவர்களிடம் என்னுடைய கதையை சொன்னதுமே, பிடித்துவிட்டது.. எனக்கு காமெடி சென்ஸ் இருப்பதாக கூறி, சம்பளம் கம்மியாகவே எனக்காக நடித்து தந்தார்கள்.. இவர்கள் 2 பேரை வைத்துதான், அந்த படத்துக்கு வியாபாரமே செய்தேன்.
பாசிடிவ் கேரக்டர்
என்னை எதுக்கு வில்லனா இந்த படத்தில் நடிக்க வெச்சே? என்று நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தின்போது கவுண்டமணி கேட்டார்.. அடுத்த படத்தில் நல்ல கேரக்டராக தருகிறேன் என்று சொல்லி, பொண்டாட்டி சொன்னா கேட்கணும், பொறந்த வீடா, புகுந்த வீடலா போன்றவற்றில் பாசிட்டிவ் கேரக்டர்களை தந்தேன்.. டிராமா ஆர்ட்டிஸ்ட் என்பதால், கவுண்டமணி அனைத்து கேரக்டரையுமே நடித்து விட்டார்..
என்னை பொறுத்தவரை கவுண்டமணி செந்தில்தான், சூப்பர் ஸ்டார்கள்.. ஒருகட்டத்தில் யூத் கெட்டப்பில் கவுண்டமணி சார் நிறைய படங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார்.. அதற்கு பிறகுதான், வடிவேலுவுக்கு வாய்ப்பு தந்தேன். அப்போது வடிவேலுவுக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் இல்லை.. ஒருநாள் வடிவேலு, அவரது மேனேஜர் இருவரும் என்னிடம் வந்து, உங்க படத்தில் நிறைய காமெடி சீன்கள் உள்ளன. எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்..
ஒல்லி வடிவேலு
ஆனால் வடிவேலு அப்போது ஒல்லியாக இருந்தார்.. வெயிட்டான ரோல் தரவும் முடியாது.. அப்போதே என்னிடம் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன், குமரிமுத்து, சார்லி, சின்னி ஜெயந்த், என ஏகப்பட்ட பேர் இருந்தனர்.. பிறகுதான், கோவை சரளாவை ஜோடியாக சேர்த்து நடிக்க வைக்க நேர்ந்தது.
ஜூனியர் வடிவேலுவுக்கு கோவை சரளா ஜோடியா? என்று அவங்க 2 பேருக்கும் கோபம் வந்துவிட்டது.. பிறகு அவர்களை சமாளித்து சமாதானம் செய்தேன்.. வடிவேலு-கோவை சரளா ஜோடி, வெற்றி பெற்றது.. பிறகு ஆறேழு படங்கள் வடிவேலு என்னிடம் பணியாற்றினார்..
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
கவுண்டமணி சார், ஒண்ணா இருக்கணும் கத்துக்கணும் படத்துக்காக 50 நாள் கால்ஷீட் தந்தார்.. அதில் அவருக்கு வெட்டியான் கேரக்டர்.. 50 நாள் தேதி தந்துட்டு, வெறும் 5 லட்சம்தான் என்னிடம் சம்பளம் வாங்கினார்..
அந்த நேரத்தில் ஒருநாளைக்கே 3 லட்சம் வாங்கிட்டு இருந்தார் கவுண்டமணி சார். 50 நாள் என்றால்?? இப்படியெல்லாம் எனக்காக உதவியவர் கவுண்டமணி சார்.
ஹீரோ கவுண்டமணி
ஏவிஎம்மில் எஜமான் என்ற படத்தை ஆர்வி உதயகுமார் எடுத்திருந்தார். அதில் நடிக்க கவுண்டமணியை அழைத்தபோது, 30 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார்.. அதற்கு ஏவிஎம்மில், வி.சேகர் கிட்ட மட்டும் 5 லட்சம்? எங்களிடம் 30 லட்சம் கேட்கிறாயே? என்று கேட்டுள்ளார்கள்..
அதற்கு கவுண்டமணி, அந்த படத்தில் நான்தான் ஹீரோ.. வெட்டியானாக நான் மட்டுமே நடிக்கிறேன். என்மீதுதான் கதை நகர்கிறது.. ஆனால், எஜமான் படத்தில் ரஜினிதான் ஹீரோ.. அவருக்கு நான் பெட்டி தூக்கற கேரக்டர்.. வேண்டுமானால ரஜினி கேரக்டரை எனக்கு தந்தால், 5 லட்சம் சம்பளம் உங்களிடமும் வாங்கி கொள்கிறேன். இனிமேல் ஹீரோவுக்கு எடுபிடி கேரக்டர் என்றால் எனக்கு 40 லட்சம் சம்பளம்தான்" என்றாராம்.
வடிவேலு அப்படி கிடையாது
ஆனால், வடிவேலு அப்படி கிடையாது.. என்கிட்டயே அதிக சம்பளம் எதிர்பார்த்தார்.. கேரக்டர் வாய்ப்பு தந்து, கோவை சரளாவை ஜோடியாக தந்து, டான்ஸையும், சண்டைப்பயிற்சியையும் கற்று தந்து படங்களிலும் வாய்ப்பு தந்தேன்.. ஆனால், தூக்கி விட்டவர்களிடமே கறாராக பேசிவிட்டார்.
இத்தனைக்கும் கோவை சரளா, ஜூனியரான வடிவேலுவுடன் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.. நான்தான் சமாதானம் செய்து, வடிவேலு நன்றாக நடிக்கக்கூடியவர் என்று சொல்லி, கோவை சரளாவுடன் நடிக்க வைத்தேன். அதே கோவை சரளா எப்போதுமே என்னிடம் அளவான சம்பளத்தையே வாங்கி கொள்வார்.
பழையதை மறக்க கூடாது என்பதால்தான், பாலச்சந்தர் சார் நெருக்கடியாக இருந்த சமயங்களில் எல்லாம், ரஜினிகாந்த் சம்பள விஷயத்தில் அத்தனையும் விட்டுக்கொடுத்தார்.. அந்த குணம் வடிவேலுவிடம் இல்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications