லைஃப்ல நான் எடுத்த தப்பான முடிவு? துரோகம் ரொம்ப கொடுமையானது! டி இமான் உருக்கம்
சென்னை: இசையமைப்பாளர் டி இமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையில் தான் எடுத்த தப்பான முடிவு பற்றியும், வாழ்க்கையில் துரோகம் எவ்வளவு கொடுமையானது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் டி இமான் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து பலரின் சோகங்களை மறக்க செய்திருக்கிறார். அவருடைய பாடல்களை கேட்கும் போது ஒரு விதமான புத்துணர்வு பலருக்கும் ஏற்படும். அதே நேரத்தில் சமூக ஆர்வலராகவும் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளின் போது இமான் உடல் உறுப்பு தானம் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இமான் பேசியது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் இமானிடம் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தவறான முடிவு எப்போதாவது எடுத்து விட்டோம் என்று பீல் பண்ணி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இமான் பதில் கூறியிருக்கிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அப்படி தவறான முடிவு என்னுடைய வாழ்க்கையில் இதுவரைக்கும் எடுத்ததே கிடையாது. எந்த விஷயமாக இருந்தாலும் நான் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தான் முடிவு எடுப்பேன். அதனால் நான் எடுத்த முடிவு தவறாகிவிட்டது என்று நான் பீல் பண்ணியது இல்லை என்று கூறி இருக்கிறார்.
அதை தொடர்ந்து துரோகம் பற்றிய கேள்விக்கு, துரோகம் ரொம்பவும் கொடுமையானது. ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பாடத்தை கற்று கொண்டால்... நாம சந்திக்கிற எல்லாரிடமும் அதே மனநிலையில் பார்ப்போம் ஆனால் அப்படி இருக்கவே செய்யாது. ஏன்னா நாம சந்திக்கிறவங்க ஏற்கனவே வேற பிரச்சனையில் இருப்பாங்க. அவங்க கிட்ட நாம பேசும்போது தான் அவங்க வேற பிரச்சினையில் இருப்பதே நமக்கு தெரியும்.
அதனால் நாம் ஒரு இடத்தில் துரோகம் அடைந்து விட்டோம் என்றால் அடுத்தவர்களை பார்க்கும்போது இப்படித்தான் இருப்பார்கள் என்று நாமாக யாரையும் யூகிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து வாழ்க்கையில் பெய்லியரை எப்படி கடப்பது என்ற கேள்விக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதற்கு பெய்லியர் எல்லோருடைய வாழ்க்கையில் இருக்கும். அதை நாம் இன்னைக்கோ நேற்றைக்கோ நடந்த ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டு கடந்து போய்விட வேண்டும். அதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கொண்டு நாளைக்கு நாம எப்படி வெற்றியாக மாற்றலாம் என்று மனநிலைக்கு வந்து விட வேண்டும்.
பொதுவா இந்த தோல்விகள் எல்லாமே ஒரு ஹோப் தான். காரணம் ஹோப் என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்னைக்கு எப்படி வேணாலும் இருக்கலாம் நாளைக்கு கண்டிப்பா மாறும் என்ற நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு மனிதனும் தூங்குறான், முழிக்கிறான். அதனால் தோல்விகள் கூட ஒரு நம்பிக்கைதான் என்று இமான் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications