Lady Luck குக் வித் கோமாளியில்! ஆர்யன் பேச பேச! கண்ணீர் விட்டு அழுத ஷபானா! ஷாக்கான நடுவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி ஷோ எப்போதும் கலகலப்பாக இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் குக் ஷபானா கண்ணீர் விட்டு அழுத காட்சி வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் நேற்றைய எபிசோடிற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது கணவர் ஆர்யன் சொன்னதை கேட்டு ஷபானா கண்ணில் கண்ணீர் வடிந்தது.

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு, கவுசிக் சங்கர், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர். இது கடந்த 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

television cook with comali

இந்த நிகழ்ச்சியில் 10 குக்குகளும் 10 கோமாளிகளும் உள்ளனர். புகழ், சரத், ராமர், சுனிதா, சவுந்தர்யா, சர்ஜின், பூவையார், தங்கதுரை, குரேஷி, டோலி ஆகியோர் கோமாளிகளாக உள்ளனர்.

குக்குகள்

அது போல் குக்குகளாக மதுமிதா, ஷபானா ஷாஜகான், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், சவுந்தர்யா சில்லுக்குரி, ராஜு ஜெயமோகன், கஞ்சா, சுந்தரி அக்கா, நந்தகுமார் ஆகியோர் குக்குகளாக உள்ளனர். இவர்கள் முதல் எலிமினேஷனாக சவுந்தர்யா சென்றுவிட்டார்.

யார் எலிமினேஷன்

கடந்த வாரம் கஞ்சா கருப்பு எலிமினேட் ஆகி வெளியேறிவிட்டார். மீதமுள்ள 8 போட்டியாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். இவர்களில் இரு வாரங்களாக பிரியா ராமன் செஃப் ஆப் தி வீக் வாங்கியிருந்தார்.

television cook with comali

அடுத்த வாரம்

பின்னர் அடுத்த வாரம் ராஜு ஜெயமோகன், அதற்கு அடுத்த வாரம் நந்தகுமார், பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோ செஃப் ஆப் தி வீக் வாங்கியிருந்தனர். கடந்த வாரம் சுந்தரி அக்கா வாங்கியிருந்தார். அவர் அப்போது ஆனந்த கண்ணீர் விடுத்தார்.

சீரியல் நடிகை

இந்த வாரம் எபிசோடில் குக்குகளின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சீரியல் நடிகை ஷபானாவின் கணவர் ஆர்யன் வந்துள்ளார். அவர் நடுவர்களிடம் தனது மனைவி குறித்து பெருமையாக பேசுவதை கேட்டு ஷபானாவிற்கு கண்களில் மளமளவென கண்ணீர் வந்துவிட்டது.

திருமணம்

ஆர்யன் கூறுகையில், எனக்கு உண்மையான அங்கீகாரம் கிடைத்ததே ஷபானாவை திருமணம் செய்த பிறகுதான். அதன் பிறகுதான் ஆர்யன் என்ற ஒருத்தர் இருக்காரு, இந்த சீரியலில் நடிக்கிறாரு என்பதே தெரியும். இவர் லேடி லக், இதை எல்லா மேடைகளிலும் நான் சொல்லியிருக்கிறேன் என்றார்.

கலங்கிய ஷபானா

அப்போது ஷபானா கண் கலங்கிவிட்டார். உடனே செஃப் கவுசிக், "ஷபானா, உங்கள் கணவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரி கணவர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்றார். உடனே ஆர்யன் "உண்மையில் சொல்ல போனால் ஷபானாதான் என்னை பார்த்துக் கொள்கிறார்" என கூறிவிட்டு ஐலவ் யூ என்றார்.

television cook with comali

ஷபானா சொன்னது என்ன

அப்போது ஷபானா பேசுகையில், எனக்கு அத்தனை சுதந்திரத்தை ஆர்யன் கொடுத்திருக்கிறார். எந்த விஷயத்திலும் தடை கிடையாது. "உனக்கு பிடிக்கிறதா, நீ நீயாக இருக்கிறியா, ஜாலியா இரு" என்றுதான் சொல்வார். நான் இந்த ஷோவில் இத்தனை மகிழ்ச்சியாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதற்கு காரணமே இவர்தான்! எனக்கு எந்த பயமும் இல்லை என்று ஷபானா தெரிவித்தார்.

சவுந்தர்யா ஆறுதல்

அப்போது அவருக்கு கோமாளி சவுந்தர்யா கட்டி பிடித்து ஆறுதல் சொன்னார். ஆர்யனை தங்கதுரை கட்டி அணைத்து பாராட்டினார். இந்த ஜோடியை போல் பிரியா ராமனின் கணவர் ரஞ்சித்தும் இந்த ஷோவிற்கு வந்துள்ளார். அது போல் உமைர் லத்தீப்பின் தாயும் வந்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+