மாதம்பட்டி ரங்கராஜ் இப்படிப்பட்டவரு தான்! நானே பார்த்திருக்கிறேன்! ஓபனா போட்டு உடைத்த சுனிதா
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருசிலப் படங்களில் மட்டுமே நடித்து வெற்றியைப் பெற முடியாத நிலையில், தனக்குத் தெரிந்த சமையல் தொழிலைக் கையில் எடுத்து, அதில் மிக விரைவிலேயே வெற்றியைக் கண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் தொழிலில் அதிகம் கவனம் செலுத்திய இவர், பிரபலங்களின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி எனப் பல இடங்களிலும் இவரது சமையலே அதிகம் இருந்தது. விஜய் டிவியின் புகழ்பெற்ற 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மிகவும் ஃபேமஸ் ஆன இவர், தற்போது தன் தனிப்பட்ட வாழ்க்கையால் பேசுபொருளாகியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்: சமையல் தாண்டியப் பயணம்
மாதம்பட்டி ரங்கராஜ், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் தனது சமையல் திறமைக்காகவே தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறார். இவரது சமையல், தரமானதாகவும் சுவையானதாகவும் பேசப்பட்டது.
பிரபலங்கள் வீட்டு பங்க்ஷன் என்று அங்கு மாதம்பட்டி ரங்கராஜன் தான் வெள்ளை வேஷ்டி சட்டையிலும், கோட் சூட்டு போட்டுக் கொண்டும் கையில் கரண்டியுடன் சமையல் செய்வது போலவும், வந்த விருந்தினர்களை கையெடுத்து கும்பிட்டு வரவேற்பது போலவும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் பொறாமை பட வைத்திருந்தார்.

சமையல் தொழிலில் பிசியாக இருந்த போதும், சினிமாவில் ஆர்வம் காரணமாக, ஒருசிலப் படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும், சமையல் துறையில் இவரது வளர்ச்சி அபரிமிதமானது. சின்னத்திரையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டு, தனது அமைதியான அணுகுமுறை, நடுநிலையான விமர்சனம் மற்றும் உணவு குறித்த ஆழமான அறிவால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
வெடித்த குடும்பப் பஞ்சாயத்து
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராகப் புகழ் பெற்ற பிறகு, மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சர்ச்சைகள் வெடித்தன. மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடைய முதல் மனைவிக்குத் தெரியாமல் அல்லது முறையாக விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்தப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாகவும் இரண்டாவது மனைவி அவர் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வழக்குத் தொடர்ந்தார். இந்தச் செய்திகள் அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
முதல் மனைவியின் பதிவு
இந்த வழக்குகளுக்கு நடுவே, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி நேற்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றும் இணையத்தில் வைரலாகி, இந்தச் சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்தது. இந்தப் பதிவில் அவர், ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பச் சண்டைகள் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
சுனிதாவின் ஆதரவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், நடன அழகியும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான சுனிதா, அவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. "நான் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தயாரிப்பில் 'மிஸ் மேகி' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே ஸ்வீட்டானவர். எனக்குத் தெரிந்து மீடியாவில் வேலை செய்யும் ஆட்களிலேயே ரங்கராஜ்தான் மிகவும் ஜென்யூனான ஆள்", எல்லாரிடமும் மரியாதை ஆகத்தான் நடந்து கொள்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமையல் துறையில் நட்சத்திரமாக ஜொலித்த மாதம்பட்டி ரங்கராஜ், தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள இந்தக் குடும்பப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications