புது பெல்ட்டுக்கு பழைய பக்கிள்ஸ் வச்ச மாதிரி... புரிஞ்சுதா?
சென்னை: விஜய் டிவியின் பாப்புலர் ரியாலிட்டி ஷோவில், பலரின் மனத்தைக் கொள்ளைக் கொண்டது குக்கு வித் கோமாளி ஷோ. இந்த லாக்டவுன் காலத்தில் இந்த ஷோவை விஜய் டிவியில் மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடுகிறது.
சும்மா ஜாலிக்குன்னு இந்த ஷோவை, ஒரு நகைச்சுவை சானலில் ஜோக்ஸ் பார்ப்பது போல பார்க்கலாம். அப்படித்தான் நினைத்து விஜய் டிவியும் குக்கு வித் கோமாளி ஷோவை அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது.
ரம்யா பாண்டியனுக்கு கோமாளியாக யார் போவது என்பதில் போட்டி இருக்க...பிஜிலி ரமேஷ் அவருக்கு கோமாளியாக வந்தார். அப்போது புகழ் பேசிய டயலாக்தான் புது பெல்ட்டுக்கு பழைய பக்கிள்ஸ் வச்ச மாதிரி இருக்கு ரம்யா, பிஜிலி ரமேஷ் ஜோடின்னு சொன்னது.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் படங்களில் நடித்தபோது கூட இத்தனை புகழையும்,ரசிகர்களையும் பெறவில்லை.. விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உலகப் புகழ் அடைந்து விட்டார். ரொம்ப சாதுவான ரம்யா அப்போதான காலக்கட்டங்களில் தான் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்று யாரிடமும் சொல்லவில்லை.

புரட்டாசி விரதம்
கோமாளிகள் கையில் சங்கிலி போட்டு பூட்டி விட்டார்கள். அந்த பூட்டைத் திறக்கும் சாவி யாரிடம் வருதோ, அந்த குக்குகளுக்கு இவர்கள் கோமாளியாக வருவார்கள். ரம்யா பாண்டியன் சாவியை எடுத்ததுதான் தாமதம், பாலா என் சங்கிலியைத் திறங்கன்னு சொல்லி கிட்டே வருகிறார். திறக்கலை..அதுக்கு பாலா அடித்த கமெண்ட்...புரட்டாசி மாசம் விரதம் இருக்கும்போது பிரியாணியை சாப்பிட குடுப்பது மாதிரி இருந்துச்சு என்பது....எதாவது புரிஞ்சுதா?

பிகில் ரமேஷ்
ரம்யா பாண்டியன் கையில் இருந்த சாவி, பிகில் ரமேஷ் கையில் பூட்டப்பட்டு இருந்த பூட்டைத்தான் திறந்தது. அதனால், பிகில் ரமேஷ், ரம்யா பாண்டியனின் கோமாளியாக சேர்ந்தார். இது பொறுக்காத புகழ், புது பெல்ட்டுக்கு பழைய பக்கிள்ஸ் வச்ச மாதிரி இருந்துச்சு அந்த ஜோடின்னு வயிறு எரிஞ்சார்.

குக்கு வித் கோமாளி
விஜய் டிவிக்கு சனி, ஞாயிறுகளில் கொஞ்சமாவது ரேட்டிங்கை உயர்த்தி காட்ட உதவிய ஷோ என்றால் அது குக்கு வித் கோமாளி ஷோ என்று சொல்லலாம். கொஞ்சம் பிரமாண்டமாகவே தயாரிக்கப்பட்டு, பெரு வெற்றியை பெற்ற குக்கு வித் கோமாளி ஷோவை விஜய் டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications