அந்த ஆடியோவே fake.. மணிமேகலை ஏன் இதை பண்ணல? பிரியங்கா பாவம்.. வரிந்து கட்டிய ரவீந்தர்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனைதான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது. இதில் ரவீந்தர் பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தின் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை மாலையில் மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு அந்த வீடியோவில் தான் விலகியதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான். அவர் இந்த நிகழ்ச்சியில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அந்த சேனலில் அவர் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இதை கேட்டதும் இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பிரியங்காவை திட்டி வருகிறார்கள். பிரியங்கா ஆரம்பத்திலிருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் போல அல்லாமல் ஒரு தொகுப்பாளர் போலவே செயல்பட்டு வருகிறார் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. அதிலும் ஏற்கனவே இதே கருத்தை பல ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கேட்டிருக்கிறார்கள். இப்போது அதே பஞ்சாயத்து வெடித்ததும் மணிமேகலைக்கு சப்போர்ட் கூடிவிட்டது.
இரண்டு நாட்களாக அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்களும் நேற்றிலிருந்து மணிமேகலைக்கு எதிராக பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் மணிமேகலை ஒரு வீடியோ வெளியிட்டதும் அப்படியே அதை நம்பி நம்ம தமிழ் மக்கள் தமிழ் பொண்ணுக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் என்று பிரியங்காவை கிழித்து வருகிறார்கள்.
ஆனால் மணிமேகலை எதற்காக அந்த வீடியோ வெளியிட்டார்? அவர் அந்த வீடியோவில் ஒரு இடத்தில் கூட பிரியங்கா பெயரை சொல்லவில்லையே? உண்மையில் பிரியங்காவால் அவருக்கு பிரச்சனை என்றால் பிரியங்கா எனக்கு இந்த பிரச்சனை செய்தார் என்று அதை சரியாக அந்த வீடியோவில் சொல்ல வேண்டியது தானே? பிரியங்கா என்னிடம் இப்படி பேசினார்! எந்த இடத்தில் இப்படி நடந்து கொண்டார் என்று மணிமேகலை தெளிவாக விளக்கம் சொன்னால் தானே அது உண்மையாக இருக்கும் ஆனால் மணிமேகலை ஏன் அதை செய்யவில்லை.
ஐந்து நாட்களாக இணையத்தில் அத்தனை ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர் பிரியங்கா இதை தான் செய்தார் என்று சொல்லவில்லை. சும்மா என்னை பேசவிடாமல் தடுக்கிறார் என்று தானே சொல்லி இருக்கிறார். இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? மணிமேகலையை பட்டிமன்ற பேச்சாளராக நான் பார்த்திருக்கிறேன் அவ்வளவு அழகாக பேசுவார். அதுபோல பிரியங்காவும் அவருடைய நிகழ்ச்சிகளில் சரியாக தொகுத்து வழங்குவர்.
மக்களை கவருகிற வகையில் தன்னை தாழ்த்தி அடுத்தவர்களை சிரிக்க வைப்பார். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு பேக் ஆடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது. அது பிரியங்காவும் மணிமேகலையும் சண்டை போட்டதாக அந்த ஆடியோவில் இருக்கிறது. அது உண்மையான ஆடியோ கிடையாது அந்த ஆடியோ பொய் என்று மணிமேகலை ஏன் ஒரு ட்வீட் போடவில்லை.
பிரியங்கா தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்கிறார் என்று சொல்கிறாரே அப்போ இந்த மாதிரி பேக்கான ஆடியோ இணையத்தில் பரவி பிரியங்காவின் வாழ்க்கையை காலி செய்வது மட்டும் சரியா? இணையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று இன்னொரு பெண்ணை ரொம்பவும் தரைக்குறைவாக பேசுகிறார்கள். பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை அவருடைய டைவர்ஸ் பற்றி எல்லாம் சிலர் கண்டமேனிக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் பிரியங்கா திறமையால் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் வாங்கவில்லை அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார், மாமா வேலை செய்கிறார் என்று வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் தவறு கிடையாதா? என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார். ரவீந்தர் பேசியது சரி என்று நினைக்கிறீர்களா? பிரியங்கா தரப்பு நியாயம் இருக்கிறதா? அல்லது மணிமேகலைக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்களா? கமெண்டை தட்டி விடுங்க.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications