குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த முறை புது நடுவர்.. செஃப் வெங்கடேஷ் பட் கொடுத்த கவுண்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இரண்டு நடுவர்கள் இருக்கும் நிலையில் இந்த சீசனில் மூன்றாவதாக புது நடுவர் ஒருவர் கலந்து கொள்கிறார். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த அடுத்த சீசன்கள் தொடங்கப்படுகிறது. அது போல தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அதைத் தாண்டி முதல் சீசனிலே மக்கள் மனதை கவர்ந்து விட்டது.

Vijay TV Cook With Comali

விமர்சனங்கள்

குக் வித் கோமாளியில் பிரபலங்கள் சமைக்கும் போது, சமையல் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கோமாளியாக கலந்து கொண்ட வித்தியாசமான நிகழ்ச்சி தமிழுக்கு அறிமுகம் ஆனதும் இந்த நிகழ்ச்சியை பார்த்ததால் பலருடைய கவலைகள் மறப்பதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்க்கும் வகையில் இருப்பதாகவும் பாசிட்டிவான கமெண்ட்ஸ் வந்தது.

குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன்

ஆனால் கடந்த ஐந்தாவது சீசனில் தான் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரிய பஞ்சாயத்தும் தொடங்கிவிட்டது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் திடீரென்று விலகுவதாக அறிவித்தார். அதுபோல இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் விலகி இருந்தது. அதைத் தொடர்ந்து சில கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மணிமேகலை, பிரியங்கா பிரச்சனை

அதுபோல நிகழ்ச்சிகளில் முடிவின் சில வாரங்களுக்கு முன்பு தொகுப்பாளனியாக இருந்த மணிமேகலை தான் விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா என்று மறைமுகமாக அவர் போட்ட போஸ்ட் இந்த நிகழ்ச்சியின் மீதும் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியே விஜய் டிவியில் இனி வராது என்ற பேச்சுக்களும் எழுந்தது.

புதிய ப்ரோமோ

இந்த நிலையில் இப்போது குக் வித் கோமாளி ஆறாவது சீசனுக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த சீசனை போலவே செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் இருவரும் நடுவராக என்ட்ரி கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரும் மூன்றாவது நடுவர் ஒருவரை அழைக்கிறார்கள். அவர் யாருமில்லை செஃப் கௌஷிக் தான்.

புது நடுவர்

செஃப் கௌஷிக் ஏற்கனவே சில சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோக்கு கீழே ரசிகர்கள் எத்தனை ஜட்ஜ் வந்தாலும் வெங்கடேஷ் பட் மாதிரி வராது என்று கமெண்ட் கொடுத்து இருக்கின்றனர். இந்த ஒரு கமெண்டுக்கு 2.5k லைக்கு கிடைத்திருக்கிறது.

வெங்கடேஷ் பட் பதில்

இதுகுறித்து வெங்கடேஷ் பட் கூறும் போது "புதிய நடுவர் வரப்போகிறார். அது ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த சீசன் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களோடு நானும் பொறுத்து இருந்து பார்ப்பேன்" என்று கூறியிருக்கிறார். அதுபோல இந்த சீசனில் யாரெல்லாம் குக்காக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் கோமாளியாக கடந்த சீசனில் கலந்து கொண்ட ஒரு சிலர் இந்த சீசனில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிகிறது. புதியதாக சௌந்தர்யா போன்றோர் வந்திருக்கிறார்கள். இந்த சீசன் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+