வெள்ளந்தியான பேச்சால் ரசிகர்களின் மனதில் குடிகொண்ட ஸ்ருதிகா...இவர் தான் அவராம்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் மூன்றாவதில் முதல் வாரத்தில் ரசிகர்களின் மனதில் ஸ்ருதிகா தனி இடத்தை பிடித்து விட்டார்.
இவருடைய வெள்ளந்தியான பேச்சால் பலர் இவரை ரசித்து வருகின்றனர்.

மூன்றாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று விடும். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக ஈர்ப்பதை தொடர்ந்து தான் தற்போது மூன்றாவது சீஸனில் அடியெடித்து வைத்திருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று என்று பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தான் சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டது.

சின்னத்திரையில் அறிமுகமாகும் ஸ்ருதிகா
இந்த சீசனில் பல புது போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய துறையில் சாதித்து விடலாம் என்று தங்களுடைய திறமையை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று பல நடிகர்களும் இதில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக இருந்து ஒரு சில வருடங்கள் சினிமா துறையை விட்டு விலகியிருந்த ஸ்ருதிகா மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார். இவருடைய என்ட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

எதிர்பாராத வரவேற்பு
சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் முதன் முறையில் கதாநாயகியாக ஸ்ருதிகா நடிக்கிறார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் இவருக்கு அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.அதற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விட்டு, தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். இவருக்கு 9 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகிய முதல் நாளில் ரசிகர்களின் மத்தியில் தனக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமென்று இவர் நினைத்திருக்க மாட்டார். தற்போது அந்த அளவிற்கு சமூக வலைத்தளம் மூலமாக அவருக்கு கிடைத்து வருகிறது.

வெள்ளந்தியான பேச்சு
ஓவர் ஆக்டிங் இல்லாமல் தன்னுடைய வெள்ளந்தியான பேச்சாலும், நெகட்டிவையும் பாசிட்டிவாக கூறும் இவருடைய கேரக்டரை ரசிகர்கள் முதல் நாளிலே ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கிவிட்டார்கள். பல ரசிகர்கள் மாடர்ன் தீபா அக்கா என்று இவருக்கு பட்டம் கொடுத்து வருகின்றனர். கடந்த சீசனில் கலந்துகொண்ட தீபாவை இவர் இந்த சீசனில் நினைவுபடுத்துகிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர். என்ன இருந்தாலும் தன்னுடைய கலகலப்பான சிரிப்பால் ரசிகர்களை இவ்வளவு வேகமாக வந்துவிடுவார் என்று யாரும் நினைக்கவில்லை. தற்போது இவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி விட்டார்களாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications