தலையில் தட்டிய செப்..கத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஜி.பி முத்து.. குக் வித் கோமாளி செட்டில் நடந்த களேபரம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காந்தாரா திரைப்படத்தில் வருவது போல ஜிபி முத்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரைக்கும் ஆன மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஜிபி முத்து தலையில் செப் அடித்திருக்கிறார்.
ஜி பி முத்து காந்தாரா திரைப்படத்தில் வருவது போன்று ஓவென்று அலறிக் கொண்டிருக்கிறார்.

நான்காவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால்யே தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது நான்காவது சீசன் பிரம்மாண்டமாக பல புது கோமாளிகளோடு தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய குக்கள்
ஏற்கனவே பழைய கோமாளிகளாக இருந்தால் புகழ், சுனிதா, குரோஸி, மணிமேகலை ஆகியோர் உடன் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரும் புதிய கோமாளிகளாக அறிமுகமாகி இருக்கின்றனர். ஏற்கனவே இதுவரைக்கும் இருந்த சிவாங்கி முதல் முறையாக இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இடம்பெறவில்லை.

இந்த வாரம் சேலஞ்ச்
இந்த நிலையில் சீசன் தொடங்கி ஒரு சில வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்க அவரோடு ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்த போட்டியாளர்களுக்கு பிறகு இந்த வாரம் குச்சி சிப்ஸ் சேலஞ்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து போட்டியாளர்களும் குக்களும் கொண்டாடி சந்தோஷத்தில் துள்ளுகின்றனர். பிறகு அனைவரும் தனித்தனியாக தங்களுடைய வேலையை தொடங்குகின்றனர்.

கத்தும் ஜி பி முத்து
அதில் எப்போதும் போல வேலை செய்து கொண்டிருக்கும் போட்டியாளர்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் செப்புகள் அங்கே எங்கே என அழைந்தபடியே இருக்க, அப்போது புகலிடம் செப் வெங்கடேஷ் பட் ஓ என்று கூற அதற்கு புகழ் ஓ என்று கத்த அதைத் தொடர்ந்து ஜி பி முத்துவும் ஓ என்று காந்தாரா திரைப்படத்தில் சாமி வந்து கத்துவது போன்று ஜி பி முத்துவும் கத்திக் கொண்டிருக்கிறார் அப்போது அருகில் இருந்த செப்பு தாமு தலையிலே தட்டி ஏன் இப்படி கத்துகிற என்று கேட்க, ஜி பி முத்து அதிர்ச்சி அடைகிறார் இந்த புரோமோ தற்போது அதிகமாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications