குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் இவர் தானா? இது எதிர்பார்க்காதது தான்..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் டேஞ்சர் சூனில் வி.ஜே விஷால் மற்றும் கோபி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: குக் வித் கோமாளி நான்காவது சீசனில் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆம் தேதிக்கான ஏழாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
சனி மற்றும் ஞாயிறு இரவு ஒன்பது முப்பது மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் இந்த வாரத்தில் டேஞ்சர் சோனில் விஜே விஷால் மற்றும் மைன் கோபி இருவரும் இருப்பதாக செப்கள் அறிவித்து இருக்கின்றனர்.

நான்காவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால்யே தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது நான்காவது சீசன் பிரம்மாண்டமாக பல புது கோமாளிகளோடு தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய குக்கள்
ஏற்கனவே பழைய கோமாளிகளாக இருந்தால் புகழ், சுனிதா, குரோஸி, மணிமேகலை ஆகியோர் உடன் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரும் புதிய கோமாளிகளாக அறிமுகமாகி இருக்கின்றனர். ஏற்கனவே இதுவரைக்கும் இருந்த சிவாங்கி முதல் முறையாக இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இடம்பெறவில்லை.

இந்த வாரம் சேலஞ்ச்
இந்த நிலையில் சீசன் தொடங்கி ஒரு சில வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்க அவரோடு ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்த போட்டியாளர்களுக்கு பிறகு இந்த வாரம் குச்சி சிப்ஸ் சேலஞ்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து போட்டியாளர்களும் குக்களும் கொண்டாடி சந்தோஷத்தில் துள்ளுகின்றனர். பிறகு அனைவரும் தனித்தனியாக தங்களுடைய வேலையை தொடங்குகின்றனர்.

வெளியே செல்லும் நபர்
இந்த நிலையில் இந்த வாரத்தில் வி.ஜே விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் பேஸ் ஆப் குக்கிங் நிலைக்கு போகப் போகிறார்கள் என்று வெங்கடேஷ் பட் அறிவிக்க, தாங்கள் செய்த சமையல்களை அவர்களுக்கு விளக்குகின்றனர். அப்போது இதில் எங்கே குக்கிங் இருக்கிறது என்று செப் தாமு கேட்க? இருவருடைய முகத்திலும் மரண பீதி தெரிகிறது. இவர்கள் ரெண்டு பேரில் யாருக்கு கடைசி குக்கிங் ஆக இருக்கப் போகிறது என்று தெரிய வில்லை என்று தொகுப்பாளர் ரக்ஷன் கூற, இதுல இருந்து கண்டிப்பா ஒருத்தங்க பிரிஞ்சு போறாங்கன்னு நினைக்கும் போது கண்டிப்பா சங்கடமா இருக்கு, இன்னைக்கு இந்த ஷோவில் இருந்து வெளியே போகப் போகிறது என்று இருவரையும் நோக்கி வெங்கடேஷ் பட் நடந்து செல்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் வெளியே செல்ல இருப்பது மைம் கோபி தான் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.












Click it and Unblock the Notifications