இப்போ அம்மாவும் இல்லை.. கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தந்தையை பற்றி உருக்கமாக பேசிய விசித்திரா
நடிகை விசித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் தன்னுடைய தந்தையின் மரணத்தை பற்றியும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நடிகை விசித்திரா கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று வெளியேறி இருந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பல நெகிழ்ச்சியான தகவல்களை கூறி இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தையின் மரணம் தற்போது தன்னுடைய தாயாரின் மரணத்தால் தான் படும் வேதனையை பற்றி உருக்கமாக விசித்திரா பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

திரைப்படங்களில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களோடு பல படங்களில் பெண் காமெடியனாக நடித்து பிரபலமானவர்களுள் நடிகை விசித்திராவும் ஒருவர். ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிறகு கதாநாயகி ஆகவும் வில்லி கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்த இவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

மீண்டும் சின்னத்திரையில்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் விசித்ரா அதே சமயத்தில் விஜய் டிவியில் தற்போது தொடங்கி இருக்கும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் திடீரென விலகி இருக்கிறார். இதற்கான காரணம் தன்னுடைய தாயின் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்று அந்த நேரத்தில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

தாயாரின் மரணம்
இந்த நிலையில் நடிகை விசித்திரா நடிகை வனிதா உடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் என்னுடைய அம்மாவிற்கு இடுப்பு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அவர் அதிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்து விட்டார். அறுவை சிகிச்சை நல்லபடியாகத்தான் முடிந்தது. ஆனால் அது நடந்து முடிந்து மூன்றாவது நாள் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு 72 வயதாகிறது. அவர் ஒரு சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்து வந்தார். அதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தான் தற்போது இப்படி ஆகிவிட்டது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

அப்பாவின் கொடூர கொலை
முன்பே தன்னுடைய அப்பா கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார்... அதில் என்னுடைய அப்பா முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். என்னுடைய அப்பா இருந்த சமயத்தில் முகமூடி கொள்ளை என்பது அதிகம் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அப்பா ஒருவேளை அவர்களை தடுத்து நிறுத்தி இருப்பார். இல்லை என்றால் அவர்களுடைய முகத்தை பார்த்திருப்பார். அதனால் தான் அந்த கொள்ளையர்கள் அப்படி செய்து விட்டார்கள். இப்போது என்னுடைய அம்மாவும் என்னோடு இல்லை, என்னுடைய அப்பாவும் இல்லை ஒரு அனாதை போல நான் உணர்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

அம்மாவுடைய வருத்தம்
அப்பா இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு செல்லும் போது கீழே விழுந்து சுண்டு விரலில் அடிப்பட்டு விட்டது. ஆனால் அந்த காயத்தை பற்றி அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாராம். அவர் சுண்டு விரலில் சிறிய அடிபட்டதற்கே அவ்வளவு வருந்தி இருக்கும்போது அப்பா கொலை செய்யப்படும்போது, அதனை என்னுடைய அம்மா பார்க்கும்போது எப்படி வருந்தி இருப்பார் என்ற எண்ணம் எனக்குள் இப்ப வரைக்கும் ஏற்பட்டு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.

பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லை
நாம் ஏதாவது தவறு செய்து விட்டால் அப்பா திட்டுவார் என்ற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அதுவும் பாதியில் போய்விட்டது. தற்போது அம்மாவும் இறந்த பிறகு எனக்கு பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லை என்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சகோதரிகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அவர்களின் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு வேறு வேறு இடங்களில் இருக்கின்றனர். அம்மா இறப்பதற்கு முன்பு சில காலம் வயது முயற்சியால் சிரமப்பட்டு கொண்டுதான் இருந்தார் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று உருக்கமாக பேசிய விசித்திராவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications