CWC 5: நான் யாரையும் ரீப்ளேஸ் பண்ணல.. அந்த “செஃப்” தான் எனக்கு.. மாதம்பட்டி ரங்கராஜன் ஓப்பன் அப்
சென்னை: நடிகராகவும் செஃப்பாகவும் கலக்கி கொண்டிருக்கும் "மாதம்பட்டி ரங்கராஜன்" தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் வார அனுபவம் எப்படி இருந்தது? தனக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? என்பது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்த வகையில் திறமையும் உழைப்பும் இருந்தால் நமக்கு வெற்றி எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பதற்கு சான்றாகத்தான் மாதம்பட்டி ரங்கராஜன் கலக்கி கொண்டு இருக்கிறார். கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போது பல நாடுகளுக்கும் பல்வேறு பிரபலங்களின் வீட்டு பங்க்ஷனுக்கும் சமைத்து அனைவரையும் வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை நடுவராக அமர்த்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய அளவில் சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் இந்த சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று வீடியோ வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து விலகிக் கொண்டே இருந்தனர்.
அந்த நேரத்தில் இந்த சீசனின் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டதும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் இந்த நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நான் சில வருடங்களுக்கு முன்பு இணையத்தை பயன்படுத்த தொடங்கிய போது ஒவ்வொரு கமெண்ட்களையும் படிப்பேன்.
அந்த நேரத்தில் ஒரு சில நெகட்டிவ் கமண்டுகள் பார்த்ததும் எனக்கு பதட்டத்தையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும். அதற்குப் பிறகு நான் கொஞ்சம் ஸ்ட்ரக் ஆகி விடுவேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கே நாட்கள் ஆனது. ஆனால் இப்போது நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி நான் சிந்திக்க போறது கிடையாது. நமக்கு அடுத்தடுத்த வேலை இருக்கிறது. அதில் கவனத்தை செலுத்திக் கொண்டு போக வேண்டும்.
நம்மை நாம் சரியாக கவனித்துக் கொண்டால் நம்மால் அடுத்த கட்டத்தில் தைரியமாக அடி எடுத்து வைக்க முடியும். அதே நேரத்தில் நெகடிவ் கமெண்ட் ஓடுகிற அவர்களின் மனநிலையில் இருக்கிறார்களோ அவர்கள் அதைத்தான் கமெண்டில் தெரிவிப்பார்கள். அதை நாம் தலையில் ஏற்றி ஒன்றும் ஆகப்போறது கிடையாது என்று புரிந்து கொண்டேன்.
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள போகிறேன். செஞ்ச போது பலர் பாராட்டினார்கள். சிலர் இவர் ரொம்ப ஸ்ட்ரெட் ஆன ஆளு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி எனக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது. இதில் செஃப் தாமு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அவர் சமையல் பண்றதை பார்த்து அம்மா அப்பாவுக்கு ரொம்பவே பிடிக்கும்.
அதுவும் சில வருடங்களுக்கு முன்பு பரவை முனியம்மாவோடு சேர்ந்து செஃப் தாமு சமையல் செய்வார். அந்த நிகழ்ச்சிகளை அம்மா அப்பா ரொம்பவே விரும்பி பார்ப்பாங்க. இப்போ நான் அவரோடு நடுவராக இருக்கும்போது அப்பா அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷம். அது போல செஃப் தாமு எனக்கு வெல்விஷர் ஆகவும் குருவாகவும் பல விஷயங்களை சொல்லித் தருகிறார்.
யூடியூப்பர் இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்.. மனைவி கொடுத்த விளக்கம்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
அதுபோல நிகழ்ச்சியில் இருப்பவர்களும் ஒரு பாசிட்டிவ் மனநிலையை கொடுக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு செஃப்க்குள் ஒரு ஸ்டைல் இருக்கும். சிலர் சாப்பிடாமலேயே வாசத்தை வைத்து அதில் இருக்கும் குறையை சொல்லி விடுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரையில் சாப்பாடு சாப்பிட்டு டேஸ்ட் பார்ப்பதற்கு முன்பு அதனுடைய ஸ்ட்ரக்சர் அழகாக இருக்க வேண்டும். முதலில் நம்முடைய கண்கள் தான் சாப்பாட்டை பார்க்கிறது அதற்கு பிறகு ருசி பார்க்கிறோம் என்று மாதம்பட்டி ரங்கராஜன் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications